நித்தியானந்தா-வின் இந்திய சொத்துக்கள் அனைத்துக்கும் வாரிசு இவிங்களா!!ரஞ்சிதா-வுக்கு கிள்ளிக்கொடுத்த நித்தி..!

நித்தியானந்தா தன்னுடைய இந்திய சொத்துக்கள் அனைத்துக்கும் வாரிசை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. எல்லோரும் ரஞ்சிதாவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தன்னுடைய தாயை வாரிசாக நியமித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் என்று பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. தனித் தீவை விலைக்கு வாங்கி தனி நாடு என்று அறிவிக்கப்போகிறார் என்று எல்லாம் பரபரப்பாக கதையை நித்தியானந்தா தரப்பே பரப்பிவருகிறது. இந்த நிலையில், தன்னுடைய இந்திய சொத்துக்களுக்கு வாரிசு நியமித்துவிட்டதாக அவர் கூறியிருந்தார். நடிகை ரஞ்சிதாவை இந்திய சொத்துகளுக்கான உரிமையாளராக அறிவித்திருப்பார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தற்போது உண்மை நிலவரம் தெரிய ஆரம்பித்துள்ளது.

நித்தியானந்தா தன்னுடைய அம்மா லோகநாயகியைத்தான் இந்தியாவில் உள்ள தன்னுடைய சொத்துக்களுக்கான வாரிசு தாரராக அறிவித்துள்ளாராம். ரஞ்சிதாவை சமாதானம் செய்ய சில கோடிகளை மட்டுமே நித்தியானந்தா வழங்கியுள்ளாராம். நித்தியிடமிருந்து இவ்வளவு வாங்கியதே பெரிது என்று கூறுகிறார்கள் அவரது சீடர்கள். மேலும், இந்தியாவைவிட்டு வெளியேறும்போது இருக்கும் பல சொத்துக்களை விற்று கிடைத்த பணத்தை வெளிநாட்டில் உள்ள தன்னுடைய வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளார். இப்படி லண்டனில் உள்ள வங்கிக் கணக்கில் ரூ.4000 கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தியாவை விட்டு வெளியேறும்போது பிடதி ஆசிரம செலவுக்கு என்று 20 கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்து சென்றுள்ளார் நித்தி. ஆன்மிக காரியங்களுக்கு என்று பலரிடமிருந்து பல கோடி நன்கொடை பெற்று சிறுக சிறுக சேமித்த பணத்தை மொத்தமாக குடும்ப சொத்தாக மாற்றிவிட்டுச் சென்றுவிட்டார் என்று விவரம் அறிந்த அவருடைய சீடர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வெளிநாடுகளில் டெபாசிட் செய்த ரூ.4000ம் கோடி பணத்தை வைத்துத்தான் கரீபியன் தீவுப் பகுதியில் ஒரு தீவை நித்தியானந்தா வாங்கியுள்ளார். இந்தியாவில் மீதம் இருக்கும் சொத்துக்களை விற்று நித்தியானந்தாவுக்கு அனுப்பும் வேலைகள் நடந்து வருகின்றதாம். ஆனால் இது எதுவும் தெரியாதபடி இந்திய அரசு நடந்துகொண்டிருக்கிறது. அரசுத் தெரியாமல் ரூ.4000ம் கோடி வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பில்லை. அரசு ஆதரவு இருப்பதால்தான் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டும் அவருடைய சொத்துக்கள் முடக்கப்படவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

Advertisements

fogpriya

Next Post

'ரஜினிகாந்த்' தனித்தனியாக 3 பேரனுக்கும் ரூ.90 கோடி: சொத்து..!

Wed Dec 25 , 2019
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஒப்பந்தமான ‘தலைவர் 168’ படத்தின் சம்பளம் ரூ.100 என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.இந்த நிலையில் அவர் தன்னுடைய பேரன்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 90 கோடி மதிப்புள்ள பணத்தை பிக்சட் டெபாசிட்டில் டெபாசிட் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதுசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 3 பேரன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா தனுஷுக்கு […]
%d bloggers like this: