எனக்கு வெறும் காய்ச்சல் மட்டும் தான்.. ப்ளீஸ்.. எப்படியாவது கூட்டிட்டு போங்க.. சீனாவிலிருந்து இந்தியா வர தவிக்கும் இளம்பெண்..!!

 “எனக்கு வெறும் காய்ச்சல் தாங்க” என்னை எப்படியாவது இங்க இருந்து சீக்கிரம் கூட்டிட்டு போயிடுங்க” என்று மணப்பெண் கண்ணீருடன் ஒருவர் சீனாவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஈர்னபாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி சித்தூர் மாவட்டம் ஸ்ரீசிட்டியில் உள்ள டிசிஎல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சில நாட்களுக்கு முன்புதான் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது. வரும் 18-ஆம் தேதி நாள் முகூர்த்தத்துக்கு நாள் குறித்துள்ளனர்.

இந்நிலையில், வேலை விஷயமாக சீனாவில் உள்ள வுஹானுக்கு கிளம்பி சென்றார் ஜோதி. அந்த சமயத்தில், கொரோனாவின் கொடூரம் சீனாவில் தாண்டவமாடியது. அந்த மாகாணம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இது வரை 500க்கும் மேற்பட்டோர் அந்த கொடிய வகை வைரஸால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிக்காமல் இருக்க, இந்திய அரசு அங்கு இருக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுத்தது. அதன்படி பலரும் திரும்பி வருகின்றனர். அப்படி வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். அந்த வகையில், சீனாவில் சிக்கிக்கொண்ட ஜோதி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், தனக்கு கொரோனா வைரஸ் இல்லை, தன்னை உடனே கூட்டி செல்லுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஜோதி உட்பட பல இந்தியரையும் மீட்க விமானம் தயாராக இருந்தது. ஜோதியும் அந்த ஃபிளைட்டில் வர தயாரானார்.

ஃபிளைட் கிளம்புவதற்கு முன்பு அவரை பரிசோதித்தபோது, காய்ச்சல் இருந்தது. அதனால் ஜோதியை சீன அரசு இந்தியா அனுப்ப மறுத்துவிட்டது. இந்நிலையில் ஜோதி திரும்பவும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “எனக்கு வெறும் காய்ச்சல் மட்டும்தான் இருக்கு. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனக்கு கல்யாணம் நடக்க போகுது.. சீக்கிரமா இங்கிருந்து கூட்டிட்டு போங்க” என்று கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு மிகுந்திருக்கும் அந்தப்பகுதியில் சிக்கித் தவிக்கும் தங்கள் மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கும் பெற்றோர், மத்திய மாநில அரசுகள் தங்கள் மகளை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisements

Next Post

Google அடித்த அபாய மணி: சீனாவிலிருந்து அடுத்த பிரச்னை..!!யோசிக்காம இதையெல்லாம் அன்இன்ஸ்டால் செய்யவும்...

Sun Feb 9 , 2020
சர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்லலாம், செக்கோஸ்லோவேயா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்துவந்ததை அடுத்து, அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி […]
%d bloggers like this: