“எனது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து செல்கிறது” –புலம்பிய தேசிய விருது வாங்கிய இயக்குனர்…!

தேசிய விருது வாங்கிய “வெயில்”, “காவியத் தலைவன்”, “அரவான்” மற்றும் “அங்காடித் தெரு” போன்ற படங்களை இயக்கியவர் வசந்த பாலன். இவர் நீண்ட நாட்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஜி.வி. பிரகாஷ், ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடித்த “ஜெயில்” என்னும் படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும்.ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும்.ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும்.இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம்.ஆனா…..இந்த “எடுத்த படத்த ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது”……… இவ்வாறு இயக்குனர் வசந்த பாலன் முகநூலில் கூறியுள்ளார்.

இந்த படத்தை திரைக்கு கொண்டு வர இவர் படாத பாடு பட்டுவருகிறார். அவருடைய முகப்புத்தகத்தில் மிகவும் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். “ஒரு திரைப்பட இயக்குனர் எவ்வளவு துன்பத்தை தான் தாங்க முடியும். ஒரு நடிகனை சம்மதிக்க தலைகீழாக நிற்க வேண்டும். அதுவே ஒரு தயாரிப்பாளரை சம்மதிக்க தலைகீழாக நடக்கவேண்டும்.” இதெல்லாம் முடிந்தாலும் அந்த படத்தை திரைக்கு கொண்டுவர அவனது உயிரையே பணையம் வைக்கவேண்டும். தற்போது எனது உயிர் கொஞ்ச கொஞ்சமாக என்னை விட்டு சென்றுக்கொண்டிருப்பது என்னால் உணரமுடிகிறது. இந்த படம் எப்போது திரைக்கு வருமென்று என்னால் யூகிக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisements

Next Post

கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கிலும் '96' ரீமேக் ஜானு நஷ்டமாம்..!!

Mon Feb 17 , 2020
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 96. பிரேம் குமார் இயக்கி இருந்த இந்தப் படத்தில் ராமச்சந்திரனாக விஜய் சேதிபதியும், ஜானகி தேவி என்ற ஜானுவாக த்ரிஷாவும் வாழ்ந்திருந்தனர்.அனைவருடைய காதலையும் உலுக்கிப் பார்த்த, இவரது கேரக்டர்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் கன்னடத்தில் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அங்கு த்ரிஷா நடித்த கேரக்டரில் பாவனாவும் விஜய் […]
%d bloggers like this: