மழை காரணமாக – முதல் ஒரு நாள் போட்டியே ரத்து – இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ்

இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்தியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கயானாவில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. முன்னதாக மைதானத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஆட்டம் 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது.


இதனை அடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி ஆடத்தொடங்கியது. 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த போது, மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது இவின் லீவிஸ் 40 ரன்களுடனும், ஷாய் ஹோப் 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து மழை பெய்ததை அடுத்து மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள் ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

Advertisements

Next Post

Nikki Galrani Photoshoot HD Images

Fri Aug 9 , 2019
Advertisements
%d bloggers like this: