துபாயில் மாடியில் இருந்து விழுந்து இந்திய சிறுமி உயிரிழப்பு..!

மேற்காசியாவில் ஐக்கிய அரபு எமிரேட்சிலிருக்கும் ஷார்ஜாவில் 16 வயது இந்தியச் சிறுமி ஆறு மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தார்.உம் அல் குவைன் பகுதியில் பெற்றோருடன் வசித்த அப்பெண் சில காலம் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் கூறியதாவது: இறந்த சிறுமி இரண்டு மாதங்களாக தீவிர தலைவலி மற்றும் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் வசித்து வந்த ஆறாவது மாடியில் இருந்து விழுந்து இறந்துள்ளார். காலையில் துப்புறவு பணிக்கு வந்த தொழிலாளர்கள் சிறுமியின் சடலம் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கேரளா சென்றிருந்த சிறுமியின் தந்தை மகளின் மரணச் செய்தி கேட்டு ஊர் திரும்புவதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.ஷார்ஜாவில் சில தினங்களுக்கு முன் இந்தியாவைச் சேர்ந்த15 வயது சிறுமி 10வது மாடியில் இருந்து விழுந்து இறந்தார். இந்த சோகம் மறைவதற்குள் இதே போல மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் தற்கொலையா என்பது விசாரணைக்குப் பின்தான் தெரியவரும் என ஷார்ஜா போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisements

fogpriya

Next Post

அவன் என்னை ரொம்ப காயப்படுத்துகிறான்.. 'வனிதா' வெளியிட்ட உணர்வுப்பூர்வ தகவல்..!

Tue Dec 10 , 2019
தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வனிதா விஜயகுமார்.இவர் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார் வனிதா விஜயகுமார். இவருக்கும் இவரது தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல்களால் தன் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது நடிகை வனிதாவும் அவரது இரண்டு […]

You May Like

%d bloggers like this: