நித்தியானந்தா-க்கு எதிராக இண்டர்போல் “புளூ கார்னர்” நோட்டீஸ்..!

குஜராத் காவல்துறையினரால் தேடப்படும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக, சர்வதேச போலீசான இண்டர்போல், புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது. சிறுவர், சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகாரில் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்குப்பதிவு விசாரணை நடத்திய குஜராத் போலீசார், அண்மையில், நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில், குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று, ஒரு மாத காலத்திற்குப் பின்னர், சர்வதேச போலீசான இண்டர்போல், நித்தியானந்தாவுக்கு எதிராக, புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.

இதன்படி, தலைமறைவு வாழ்க்கை வாழும் நித்தியானந்தா பதுங்கியிருக்கும் நாட்டைச் சேர்ந்த காவல்துறையினர், இண்டர்போல் மூலமாக, குஜராத் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும். இதுவே, “ரெட் கார்னர்” நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், நித்தியானந்தாவை கைது செய்து, இந்திய போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கிடையே, தங்கள் நாட்டில் நித்தியானந்தா இல்லை என ஈக்குவடார் மற்றும் ஹெய்தி ஆகியவை மறுத்துள்ளன.

Advertisements

Next Post

நடிகை ஹன்சிகா-வின் பியூச்சர் பிளான்... முதல்ல குழந்தைய நல்லா வளர்க்கணும்... அதற்கு பிறகு தான் திருமணம்..!!

Thu Jan 23 , 2020
தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் ஒருகாலத்தில் கொடிகட்டி பரந்த நடிகைதான் ஹன்சிகா. தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வந்தார். தற்போது படங்கள் இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறார். இவருக்கு இன்னும் […]
%d bloggers like this: