உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார்.. “ஜமைக்கா”

ஜமைக்கா பெண் உலக அழகியானார்… இந்தாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சுமன் ராவ் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.
69-வது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20ந் தேதி தொடங்கியது. மொத்தம் 111 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றதில், பல்வேறு போட்டிகளுக்குப் பின் 40 பேர் வரிசைப்படுத்தப்பட்டனர்.

உலக அழகி யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது. இதில் ஜமைக்கா, பிரான்ஸ், இந்தியா, பிரேசில், நைஜீரியா அழகிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

இறுதிச் சுற்றில் ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் உலக அழகியாக தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற மெக்சிகோ அழகியான வனிசா பொன்சி டி லியான் (( Vanessa Ponce de Leon)) மகுடம் அணிவித்தார்.

மொரான்ட் பே-யில் பிறந்து வளர்ந்து வளர்ந்த டோனி, தற்போது அமெரிக்காவின் பிளாரிடா பல்கலைக் கழகத்தில் படித்து வருகிறார்.
பிரான்சின் ஓபெலி மெசினா இரண்டாம் இடத்தையும், இந்திய அழகி சுமன்ராவ் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றினர். இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, டயானா ஹைடன், யுக்தா முகி, மனுஷி சில்லார் உள்ளிட்டோர் உலக அழகிகளாக வெற்றிபெற்றாலும், முதன்முறையாக சுமன்ராவ்தான் 3வது இடத்திற்கு தேர்வாகி உள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

"தர்பார்" பட டிரைலர் இன்று வெளியாகிறது..

Mon Dec 16 , 2019
ரஜினிகாந்த்தின் 168வது படமான தர்பார் படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ் உள்பட பலர் நடித்து வரும் புதிய படம் தர்பார். இந்தப் படத்தின் முதல் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் டிரெண்டிங் ஆகின. சும்மா கிழி கிழி என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ரஜினியின் சிங்கிள் பாடலும் வெளியிடப்பட்டது. கடந்த 7ம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா […]
%d bloggers like this: