வரும் காலாண்டில் 19 சதவீத நிறுவனங்களில் மட்டுமே புதிதாக வேலைவாய்ப்பு

அடுத்த காலாண்டில், இந்தியாவில் வெறும் 19 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே வேலைக்கு ஆள் எடுக்க உள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மேன்பவர் குரூப் என்ற நிறுவனமானது, இந்தியாவில் 5,131 நிறுவனங்களிடமும், உலகம் முழுவதும் 44 நாடுகளில் உள்ள 59,000 நிறுவனங்களிடமும் ஆய்வு மேற்கொண்டது.

தற்போது வெளியாகி உள்ள அந்த ஆய்வறிக்கையில்,  வரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் 19 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே வேலைக்கு புதிதாக ஆட்களை நியமிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

52 விழுக்காடு நிறுவனங்கள் புதிதாக பணியாட்களை நியமிக்க விருப்பமில்லை என்று தெரிவித்து இருப்பதாகவும், 28 விழுக்காடு நிறுவனங்கள், புதிதாக ஆள் எடுப்பது குறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலாண்டில் புதிதாக  பணியாட்களை நியமிக்க உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நாடுகளில், ஜப்பான், தைவான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. பணியாட்களை நியமிக்கப் போவதில்லை என்ற நிலையில் ஸ்பெயின் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த இடங்களில் செக் குடியரசு, அர்ஜெண்டினா, கோஸ்டா ரிகா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளதாக ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சீனாவும் இந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவு, 4 விழுக்காடு அளவுக்கு மட்டுமே ஆட்களை நியமிக்க சீன நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக பொது நிர்வாகம் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள் 27 விழுக்காடு அளவுக்கு பணியாட்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 

Advertisements

Next Post

திருட்டு கதையா காப்பான்? | Director K V Anand Press Meet | Kaappaan

Sun Sep 15 , 2019
Advertisements

You May Like

%d bloggers like this: