பொள்ளாச்சி விவகாரம் பெண்கள் தான் காரணமாம்..! கே. பாக்யராஜ் சொல்கிறார்

பெண்கள் செல்போனை எடுத்துக் கொண்டு தனியாக சென்று பேசுவது ஏன் ? என்று கேள்வி எழுப்பியுள்ள இயக்குனர் கே. பாக்யராஜ், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு பெண்கள் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் நடந்த “கருத்துக்களை பதிவு செய்” என்ற படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ், பெண்கள் செல்போன் பயன்படுத்துவதை கடுமையாக விமர்சித்தார்.

பாலியல் பிரச்சனைகள் அத்தனைக்கும் பெண்கள் தான் மூல காரணம்- ஆண்கள் சின்னவீடு வைத்துக் கொண்டாலும் பெரிய வீட்டை தொந்தரவு செய்வதில்லை என்றும், வேறு ஆணுடன் செல்லும் பெண்களோ குழந்தைகளையும், கணவனையும் கொலை செய்யத் துணிவதாக தெரிவித்தார் கே.பாக்யராஜ்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பெண்களே காரணம் என்றும், பெண்கள் இடம் கொடுத்திருக்காவிட்டால் இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது என்றும் பேசினார்.

அதே நேரத்தில் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் அரக்கத்தனத்திற்கு யார் காரணம் ? என்பதை விளக்க கே.பாக்யராஜ் மறந்தது ஏன் என்பதே அனைவரின் கேள்வியாக இருந்தது.

Advertisements

fogpriya

Next Post

அம்மாவானர் ஆல்யா மானசா...பொது மேடையில் அறிவித்த கணவர் சஞ்சீவ்!

Tue Nov 26 , 2019
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.  கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் […]
%d bloggers like this: