200 பேருடன் வெள்ளத்தில் சிக்கி நடிகை மஞ்சுவாரியர் தவிப்பு..! இமாச்சலில் மீட்பு பணி

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல நடிகை மஞ்சுவாரியர் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் இமாச்சலில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.  நடிகை மஞ்சுவாரியரையும்,அவருடன் தவிக்கும் 200 பேரையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்டவர் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர்..! 90 களின் இறுதியில் மலையாள திரை உலகின் கனவு கன்னியாக வலம் வந்த மஞ்சுவாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து கொண்டு நடிப்பில் இருந்து விலகி இருந்தார். அவருடனான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்ற பின்னர் ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து  பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

கயிற்றம் என்ற மலையாளபடத்தின் படப்பிடிப்பிற்காக இரு வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பு குழுவினர் 200 பேருடன் இமாச்சல பிரதேசம் சென்றிருந்தார் மஞ்சுவாரியர். சிம்லாவில் இருந்து 330 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சத்ரு என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு கனமழை கொட்டி தீர்த்ததால் அந்த பகுதியில் திடீர் வெள்ளம் உருவானது. இதில் மஞ்சுவாரியர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்து தப்ப முடியாமல் தவித்து வருவதாக தனது சகோதரர் மதுவாரியருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார்.

அவர், பாரதீய ஜனதா கட்சியினர் துணையுடன் மத்திய இணை அமைச்சர் முரளிதரனின் கவனத்துக்கு கொண்டு சென்றார். கேரளாவை சேர்ந்த 200 பேர் கொண்ட படப்பிடிப்புக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் தகவல் இமாச்சல் பிரதேச முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் படப்பிடிப்பு நடத்தினால் மழை காலம் என்பதால் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்பதால் இமாச்சலபிரதேசத்துக்கு சென்று படப்பிடிப்பு நடத்தி வந்த நிலையில் படப்பிடிப்பு குழுவினர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது குறிப்பிடதக்கது.

Advertisements

Next Post

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை

Wed Aug 21 , 2019
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வருகை விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 மணி நேரம் கெடு விதித்திருந்தது சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் 3 அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு வந்துள்ளனர் டெல்லி உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை நிராகரித்ததை அடுத்து நடவடிக்கை. Advertisements
%d bloggers like this: