மாதவிடாயின் போது சமைத்தால் நாயாக பிறப்பீர்கள்..! “சுவாமி குருஷ்னஸ்வரப்” சர்ச்சை பேச்சு….

மாதவிடாய் நாள்களில் கணவருக்காக பெண்கள் சமைத்தால், அவர்கள் நாயாகத்தான் பிறப்பார்கள் என்று குஜராத் சாமியார் ஒருவர் பேசியது சர்ச்சைக்கு வித்திட்டு இருக்கிறது.

கடந்த 11ம் தேதி பூஜ் பகுதியில் ஸ்ரீ சகஜானந்த் பெண்கள் கல்வி நிறுவன பெண்கள் விடுதியில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் யார் என்பதை அறிய அங்கு தங்கியிருந்த 68 பெண்களும் உள்ளாடைகளை நீக்கி சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக மாநில மற்றும் தேசிய மகளிர் ஆணையம் சார்பில் கல்லுரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக கல்லூரி முதல்வர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கல்லூரியை நடத்தும் கோயிலுடன் சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி தொடர்பில் உள்ளார்.

அவர் பேசிய பேச்சுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் உள்ளது சுவாமி நாராயண் கோயில். அந்த கோயிலைச் சேர்ந்த சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜி சொற்பொழிவுகள் பல அந்தக் கோயிலின் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதில் உள்ள ஒரு வீடியோவில் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு: மாதவிடாயின் போது பெண்கள் சமைத்த உணவை உண்டால் ஆண்கள் அடுத்த ஜென்மத்தில் காளைகளாக பிறப்பார்கள்.

அதே போன்று, மாதவிடாய் காலத்தில் உணவு சமைத்தால் அவர்கள் அடுத்த பிறவியில் பெண் நாயாக பிறப்பார்கள். நான் சொல்வது எல்லாம் நமது சாஸ்திரத்தில் இருக்கிறது. எனவே ஆண்களே சமைக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று பேசியிருக்கிறார்.

Advertisements

Next Post

வலிமை படப்பிடிப்பின் போது பைக்கில் இருந்து விழுந்து தல "அஜித்" காயம்...கவலையில் ரசிகர்கள்!!

Wed Feb 19 , 2020
சென்னையில் நடந்த வலிமை படப்பிடிப்பின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாம். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்தது. அங்கு ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கினார் வினோத். இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சென்னையில் அஜித் சூப்பர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்பொழுது அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாம். இருப்பினும் அஜித் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் […]
%d bloggers like this: