மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை நெருங்குகிறது..!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை நெருங்கியுள்ளது. அதேசமயம் கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாகக் குறைந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையடுத்து, பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும், விநாடிக்கு 3 லட்சம் கனஅடி வரை நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

தற்போது இரு அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்துள்ளதால், நீர்திறப்பின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பியிருக்கும் நிலையில், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,500 கனஅடியாக உள்ளது.

அந்த அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 19,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதேபோல கபினி அணையும் நிரம்பியிருக்கும் நிலையில், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12,650 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக விநாடிக்கு 27,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும்போது, நீர் திறப்பின் அளவும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த திங்கட்கிழமை மாலை விநாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டமும் 103 அடியாக உயர்ந்தது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 111.81 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 81.01 டிஎம்சியாக உள்ளது. 

Advertisements

Next Post

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது - உயர்நீதிமன்றம்

Fri Aug 16 , 2019
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் மரபு, வழிபாடு நடைமுறைகளின் படியே அத்திவரதர் 48 நாட்கள் தரிசனம் – உயர்நீதிமன்றம் கோவில்களின் மரபு, வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம் ஆகமவிதிப்படி 48 நாட்களில் அத்திவரதரை குளத்திற்குள் வைப்பது மரபு – தமிழக அரசு தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று தரிசனத்தை நீட்டிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் Advertisements
%d bloggers like this: