ஆவின் பால் விலை உயர்வு..!

பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், வரும் 19 ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பசுந்தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை 4 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை கருத்தில் கொண்டு 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக அதாவது 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக, அதாவது 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் கூட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு வரும் 19 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும்.

Advertisements

Next Post

சென்னையில் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..!

Sun Aug 18 , 2019
சென்னையில் அதிகாலை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இரவிலும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை தொடங்கி சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, மீனம்பாக்கம், […]

Actress HD Images

Advertisements