மோடி தடுக்கி விழுந்த படியை இடிக்க உத்தரவு..!

பிரதமர் நரேந்திர மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசம் கான்பூரில் நடைபெற்ற கங்கை நதி ஆணைய கூட்டத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது அங்குள்ள படிக்கட்டுகளில் அவர் ஏறி சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டு ஒன்றில் இடறி கீழே விழுந்தார். அவர் இடறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மோடி தவறி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. படி சிறியதாகவும், குறுகலானதாகவும் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதற்கு முன்னரே பலர் அந்த படிக்கட்டுகளில் இடறி விழுந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அந்த படிக்கட்டை மட்டும் இடித்து விட்டு சரியான அளவில் புதிய படி கட்டப்படும் என கோட்ட ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

தான் இசையமைத்த பாடலைக் கேட்டு 'ரஜினி' பாராட்டியதாக இசையமைப்பாளர் டுவிட்..!

Thu Dec 19 , 2019
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் ரஜினி 168 படத்தின் படப்பிடிப்பு பாடலுடன் தொடங்கியதாகவும், தான் இசையமைத்த பாடலைக் கேட்டு ரஜினி பாராட்டியதாகவும் இசையமைப்பாளர் டி. இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தின் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள  தர்பார் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், ரஜினியின் 168 வது படத்தை சிறுத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.  இந்நிலையில், இன்று, இப்படத்தின் முதல் […]

Actress HD Images

%d bloggers like this: