மோடி சுறுசுறுப்பாக இயங்குகிறார் – பியர் கிரில்ஸ் புகழாரம்

நெருக்கடியான சூழலிலும், அமைதியாகவும், புன்முறுவல் பூத்தவாறும், பிரதமர் நரேந்திர மோடி இருப்பது, தம்மை மிகவும் கவர்ந்துவிட்டதாக, டிஸ்கவரி சேனலின், மேன் வெர்சஸ் வொய்ல்டு ((‘Man vs Wild’)) என்ற சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் ((Bear Grylls)) புகழாரம் சூட்டியிருக்கிறார்.


பிரதமர் நரேந்திர மோடியும், சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்சும் பங்கு கொள்ளும், மேன் வெர்சஸ் வொய்ல்டு ((‘Man vs Wild’)) சிறப்பு நிகழ்ச்சி, உத்ரகண்ட் மாநிலம், ஜிம் கார்பட் ((Jim Corbett)) தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. வருகிற 12ஆம் தேதி திங்கட்கிழமையன்று, உலகம் முழுவதும், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், 180 நாடுகளில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், சாகச நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.


அதில், நெருக்கடியான சூழலிலும், அமைதியாகவும், புன்முறுவல் பூத்தவாறும், பிரதமர் நரேந்திர மோடி இருப்பது, தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். கடுங்குளிர் உட்பட திடீர், திடீரென மாறும் அனைத்து தட்பவெப்ப சூழலையும், புன்முறுவலுடன், இயல்பாக எதிர்கொள்ளும் திடமான மனப்பாங்கை, பிரதமர் மோடியிடம் கண்டு வியப்படைந்ததாக, பியர் கிரில்ஸ் கூறியுள்ளார். சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் ஆழ்ந்த அக்கறை இருந்ததால் மோடி தன்னுடன் சாகச பயணம் செய்தார் என்றும், ஒரு இளைஞரைப் போன்று காட்டில் மோடி நேரத்தை செலவிட்டது தமக்கு வியப்பாக இருந்தது என்றும், பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisements

Next Post

மாநகராட்சியின் ரூ 1000 கோடி நிலம் ஆக்கிரமிப்பு..!

Sun Aug 11 , 2019
சென்னை அடையாறு காந்திநகரில் பேட்ரிசியன் கல்லூரி ஆக்கிரமித்து வைத்திருந்த மாநகராட்சிக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. நில ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக மாணவர்களை போராட தூண்டிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… இந்தியா முழுவதும் 21 இடங்களில் பள்ளிக் கல்லூரிகளை நடத்திவரும் சிறுபான்மை சுயநிதி கல்வி குழுமமான புனித பேட்ரிக் கல்விக்குழுமத்தின் சார்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு அடையாறு […]
%d bloggers like this: