தமிழக ஊடகங்களை விட பாலியல் தொழிலாளார்கள் சிறந்தவர்கள்… “நித்தியானந்தா” கருத்து…

தமிழக ஊடகங்களை விட மும்பை சிவப்பு விளக்கு பகுதி பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள் எனவும், தமிழக ஊடகங்களை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் எனவும் நித்தியானந்தா கருத்து தெரிவித்துள்ளார் பாலியல் குற்றச்சாட்டு, கொலை குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளில் தலைமறைவாக இருப்பவரும், தன்னை தானே சாமியார் என கூறிக்கொள்பவருமான நித்யானந்தா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மும்பை சிவப்பு விளக்கு பகுதி பாலியல் தொழிலாளர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக அந்தத் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழக ஊடகங்களுடன் அவர்களை ஒப்பிட்டு அவதூறு கிளப்ப வேண்டாம். தமிழக ஊடகங்களை விட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறந்தவர்கள். தமிழக ஊடகங்கள் அளவிற்கு அவர்கள் மோசமானவர்கள் கிடையாது. எனவே தமிழக ஊடகங்களை சிவப்பு விளக்கு பகுதியில் பாலியல் தொழிலாளர்களுக்கு இணையாக ஒப்பிட்டு பேச வேண்டாம் என நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகத்திற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகத்திற்கு இனிமேல் வரப்போவதில்லை. தமிழக ஊடககங்களை பொறுத்தவரை தான் இறந்து விட்டதாகவும் நித்யானந்தா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

சிவன் மேல் உள்ள காதலால்... அகோரியாக மாறிய "ஶ்ரீரெட்டி" வைரலாகும் வீடியோ...

Mon Feb 24 , 2020
நடிகை ஶ்ரீரெட்டி சிவ பெருமான் பக்தை போல் வேடமிட்டு வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலர் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி. நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்கள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் […]
%d bloggers like this: