நடுவில் ஒரு ஆண் கையில் பீர் பாட்டில்.. தண்ணி அடிக்கும் 4 இளம் பெண்கள்.. வைரலாகும் வீடியோ!

ஒரு கையில் பீர்பாட்டில்.. இன்னொரு கையில் ஸ்நாக்ஸ் என்று இளைஞருடன் இளம்பெண்கள் தண்ணி அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி கடுமையான அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது. ஒரு அறையில் வட்டமாக உட்கார்ந்திருக்கிறார்கள்.. இளம் கல்லூரி 2 பேர் பெண்கள் யூனிபார்மில் உள்ளனர்.. மேலும் சில பெண்கள் அந்த அறையில் நடமாடி கொண்டிருக்கிறார்கள்.. ஒரே ஒரு இளைஞர் மட்டும் அந்த பெண்களுடன் உட்கார்ந்துள்ளார்… நடுவில் பீர்பாட்டில்களும், ஸ்நாக்ஸ்களும் தட்டுகளில் வைக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் மயிலாடுதுறை நடந்த சம்பவம் இது.. ஒரு மாணவி கையில் பீர் பாட்டில், இன்னொரு மாணவி கையில் ஸ்நாக்ஸ்.. அந்த இளைஞர் பீர் பாட்டில் மூடியை வாயால் கடித்து எடுக்கிறார்.. எல்லோரும் சேர்ந்து தண்ணி அடிக்கிறார்கள். இந்த வீடியோவை யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை.. சோஷியல் மீடியாவில் மிக வேகமாக பரவி வருகிறது.. இதை பார்த்து பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.. அத்துடன் கவலையும் சேர்ந்து கொண்டுள்ளது.

வைரலான இந்த வீடியோ கல்லூரி நிர்வாகத்தின் பார்வைக்கு செல்ல.. சம்பந்தப்பட்ட மாணவிகளை காலேஜ் விட்டு டிஸ்மிஸ் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் இதில் சம்பந்தப்பட்ட மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அது உறுதிப்படுத்ததப்படவில்லை.. ஆனால் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் மதுவால் சின்னாபின்னமாகி விட்டன. பல உயிர்கள் பறிபோனாலும் மதுக்கடைகளை மூட முடியவில்லை. மதுவினால் பல குற்றங்கள் அதிகரித்தாலும், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இதற்காக போராட்டங்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும்தான் அதிகமாகி வருகிறது. இந்நிலையில், சில பெண்களும் குடிக்க தொடங்கி உள்ளது, பெருத்த வேதனையாக உள்ளது. மதுவின் பிடியில் வயசு பெண்கள் சிக்கி கொண்டால், யாராலுமே அவர்களை காப்பாற்ற முடியாத அபாயத்துக்கு போவார்கள் என்பது நிச்சயம்!

Advertisements

Next Post

பள்ளி பருவ காதல் ரகசியத்தை போட்டுடைத்த கண்ணழகி..! இருவரும் காதலித்தோம்.. ஆனால் அது பிரேக்அப் ஆகிருச்சு...

Sun Dec 29 , 2019
நடிகை பிரியா வாரியர் தனது காதல் அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மலையாள சினிமாவில் வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் ப்ரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் இவர் தனது புருவத்தை தூக்கி சக மாணவனை பார்த்து கண்ணடித்ததை கண்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு பிரபலமானது அந்தக் காட்சி. ராகுல் காந்தி ஒரு முறை நாடாளுமன்றத்தில் பிரதமர் […]

Actress HD Images

%d bloggers like this: