‘தலைவர் 168’ படத்தில் திடீரென இணைந்த பிரபல நடிகை…!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கும் நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஏற்கனவே மீனா, குஷ்பு, சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் இருக்கும் படத்தில் நயன்தாரா போன்ற பெரிய நடிகைக்கு அப்படி என்ன கேரக்டர் இருக்கும் என்பதுதான் தற்போது அனைவருடைய கேள்வியாக இருக்கிறது. இது எங்கள் லிஸ்டிலேயே இல்லையே என நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

இத்தனை பெரும் கூட்டத்தை வைத்து சிறுத்தை சிவா அப்படி என்னதான் படம் எடுக்கிறார் என்ற கேள்வியே தற்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு படம் ரிலீஸான பின்னர் தான் விடை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Next Post

பிகினி உடையில் கடற்கரையில் பிறந்தநாளை கொண்டாடிய எமி ஜாக்சன். . எவ்ளோ வயசு தெரியுமா?

Sat Feb 1 , 2020
ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் ஹாலிவுட் மாடலும் நடிகையுமான எமி ஜாக்சன். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக […]
%d bloggers like this: