இனிமேல் இந்திய மேப் இப்படித்தான் இருக்கும்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார். இதில், ஜம்மு காஷ்மீரில் சட்டசபை செயல்படும் என்றும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும் என்ற ஷரத்து உள்ளது.

லடாக் என்பது தற்போதைய ஜம்மு காஷ்மீர் பகுதியில், கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இடமாகும். மேற்கு பகுதி தான் பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ள பகுதி. தற்போதைய ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்பதை, இந்திய வரைபடத்தில் பார்த்தால், நாட்டின் மகுடம் போல காட்சி அளிக்கக் கூடியது. ஒரு திடகாத்திரமான வளர்ந்த நபர், தலைப்பாகை கட்டினால் எப்படி இருக்குமோ, அந்த தலைப்பாகை தோற்றத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் காட்சியளிப்பதை நீங்கள் பார்க்க முடியும். ஆனால், இப்போது காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதால், இனிமேல் இந்திய வரைபடம் வேறு மாதிரியாக காட்சியளிக்கும். அதன் மாதிரி தோற்றம் இதோ உங்களுக்காக, பாருங்க

Advertisements

Next Post

நேர்கொண்ட பார்வை திரையிடப்படும் திரையரங்க பட்டியல் இதோ

Mon Aug 5 , 2019
இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் […]
%d bloggers like this: