மன அழுத்ததில் நிர்பயா குற்றவாளிகள்…

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் அதிரடியாக காது செய்தனர். இதில் குற்றவாளி ராம் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொரு குற்றவாளி சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து மீதம் உள்ள அக்‌ஷ்ய், முகேஸ், பவான், வினய் சர்மா நான்கு குற்றவாளிகளுக்கும் 2017 ஆம் ஆண்டு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. அந்த நான்கு பேரும், தற்போது சிறையில் மன அழுத்ததில் உள்ளதாகவும், அதனால் அவர்கள் நால்வரையும் தீவரமாக கண்காணித்து வருவதாதவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் தூக்கிலடப்படும் இடத்தை மூத்த அதிகாரிகள், திகார் காவல் ஆணையர் சந்தீப் கோயல் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.

Advertisements

fogpriya

Next Post

யோகி பாபு-வுக்காகக் காத்திருந்த சூப்பர் ஸ்டார். "தர்பார்" ஷூட்டிங் இன்றே கடைசி..!

Sat Dec 14 , 2019
ரஜினிகாந்தின் தர்பார் பட கடைசி நாள் ஷூட்டிங் சென்னையில் இன்று நடக்கிறது. இதோடு இதன் படப்பிடிப்பு முடிகிறது.பேட்ட படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவர் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதில், ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. இதன் […]
%d bloggers like this: