‘இமெயில்’ மூலம் அம்பலமாகும் உண்மை.. மாயமான நித்தியின் பெண் சீடர்கள் எங்கே?

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மாயமான சகோதரிகள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பேச விருப்பம் தெரிவித்துள்ளனர்.நித்யானந்தாவிற்குச் சொந்தமாக, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மடத்தில் பணிக்கு இருந்த சகோதரிகள் 2 பேரை காணவில்லை என புகார் எழுந்தது. இதன்பேரில், அவர்களின் தந்தை குஜராத் நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, நித்யானந்தா ஆசிரமத்தில் தேடுதல் நடத்திய போலீசார், அவரது ஆசிரம நிர்வாகிகள் சிலரையும் கைது செய்தனர்.

அத்துடன், நித்யானந்தாவையும் கைது செய்ய முயன்று வருகின்றனர். இதற்கிடையே, நித்யானந்தா, தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக, தகவல் பரவி வருகிறது. அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலும் தெரியவில்லை. இந்நிலையில், மாயமானதாகக் கூறப்படும் சகோதரிகள் 2 பேரும், தற்போது தங்களது வழக்கறிஞர் வழியாக, குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதன்படி, இருவரும் மேற்கிந்திய தீவுகள் அல்லது அமெரிக்காவில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் நீதிமன்றம் முன் ஆஜராகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றம் அனுமதி அளித்தால், அவர்கள் இவ்வாறு வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் பேசி, தங்களை பற்றி பரவி வரும் தகவல்களுக்கு விளக்கம் அளிப்பார்கள் என்றும், அவர்களின் வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி நீதிபதிகள் ஆலோசித்து வருகின்றனர். மாயமானதாகக் கூறப்படும் சகோதரிகளின் இந்த தகவலால், நித்யானந்தாவிற்கு எதிரான இவ்வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது…

Advertisements

fogpriya

Next Post

மீண்டும் அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை..!

Thu Dec 12 , 2019
தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லட்சுமி. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லட்சுமி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும். அண்மையில் துபாயில் இருந்து நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக ஒய்யார […]
%d bloggers like this: