கைபுள்ளை காமெடி போல புலம்பும் நித்தியானந்தா..!

மீடியாக்கள் தன்னை வைகை புயலாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ள நித்தியானந்தா, வின்னர் படத்தில் வரும் வடிவேலுவின் வசனத்தை பேசி தனது சிஷ்ய கோடிகளுக்கு அருளாசி வழங்கி வருகிறார்

பாஸ்போர்ட் முடக்கத்தால் வெளி நாடு செல்ல முடியாமல் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திலேயே முடங்கி கிடக்கும் நித்தியானந்தா தினமும் யூடியூப் வீடியோவில் தோன்றி தனது சிஷ்ய கோடிகளுக்கு விஞ்ஞான ரீதியாக அருளாசி வழங்கி வருகின்றார்.

அந்தவகையில் அண்மையில் அருளாசி வழங்கிய நித்தி , வடிவேலுவின் வின்னர் பட நகைச்சுவை காட்சியை நினைவுப்படுத்தி கலகலப்பூட்டினார்..!

அதே போல காலில் செருப்பு அணியாமல் நடந்தால் மட்டுமே பூமாதேவியின் மூலம் நேரடியாக பல சக்திகள் உடலுக்கு கிடைக்கும் என்றும் புத்தி சொல்கிறார் நித்தி

நாட்டில் ஆளுக்கு ஆயிரம் பிரச்சனையோட பலர் சுத்திக் கிட்டு இருந்தாலும், நித்தியானந்தாவோ நாளுக்கு ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து இது போல அறிவுப்பூர்வமாக அருளாசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது..!

Advertisements

Next Post

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்வு

Wed Sep 11 , 2019
பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசு விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இத்திரைப்படம் புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு தேர்வாகியுள்ளது. புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை, நவதர்சன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்பட விழா-2019- ஐந்து  நாட்களுக்கு புதுச்சேரி முருகா திரையரங்கில் நடைபெறுகிறது.வரும் 13ம் தேதி மாலை முருகா திரையரங்கில் நடைபெறும் விழாவில் சங்கரதாஸ்சுவாமிகள் விருதை முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார்.  2018ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான சங்கரதாஸ் […]

Actress HD Images

%d bloggers like this: