நித்தியானந்தா எந்த நாட்டில் பதுங்கி இருக்கிறார் என்பதை உறுதி செய்த இண்டர்போல்.. !! எப்படி பிடிக்கபோகிறார்கள்…

கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவரை கைது செய்ய சர்வதேச போலீசார் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.கடந்த சில மாதங்களாகவே பொலிசாரிடம் சிக்காமல் தண்ணி காட்டி வரும் நித்தியானந்தாவை பிடிக்க அரசு தீவிர காட்டி வருகிறது.

குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் தனது மகள்களை கடத்தி சிறை வைத்துள்ளதாக பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நித்யானந்தா மீது அகமதாபாத் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே கர்நாடகவில் நித்யானந்தா மீது பாலியல் வழக்கு உள்ளது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.இதைத்தொடர்ந்து சர்வதேச போலீஸ் உதவியுடன் நித்யானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. மூலம் சர்வதேச போலீசை குஜராத் போலீசார் அணுகி நித்யானந்தாவை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் வைத்தனர். இதன் அடிப்படையில் நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீசார் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

குற்ற வழக்கில் தேடப்படும் ஒருவரின் அடையாளம், இருப்பிடம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து தகவல் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நாடுகள் சர்வதேச போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச போலீசாரின் அதிகாரத்துக்குட்பட்ட 150 நாடுகளில் நித்யானந்தா எங்கு பதுங்கி இருக்கிறார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.அப்போது நித்தியானந்தா இருப்பிடம் தெரிந்தால் அவரை கைது செய்ய போலீசார் ரெட்கார்னர் நோட்டீசும் பிறப்பிப்பார்கள்.

இதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக குஜராத் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், நித்யானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் ‘பெஸிஸ்’ பாஸ்போர்ட்டை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதை போலீஸ் அதிகாரிகள் யாரும் உறுதிபடுத்தவில்லை. நித்யானந்தா புதிய பாஸ்போட்டை பயன்படுத்தி எங்கும் பயணம் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கூறிய போலீஸ் அதிகாரிகள் அவருக்கு எதிராக ‘புளூ கார்னர்‘ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரது அனைத்து நகர்வுகளும் முழுமையாக கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisements

Next Post

இளம் நடிகை வித்யா பிரதீப் ஒப்பன் டாக்..!! என்னுடைய முதல் கிரஷ் அவர் மேல தான்..

Sat Jan 25 , 2020
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை கங்கனா ரனவத் மற்றும் அரவிந்த்சாமி நடிக்கும் திரைப்படம் “தலைவி”. இந்த படம் மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகின்றது.ஷூட்டிங் முடிந்த நிலையில் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகை கங்கனா ரணவத் ஜெயலலிதா-வாக நடிக்க நடிகர் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இந்த படத்தின் நானும் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார் இளம் நடிகை வித்யா பிரதீப். இவர், […]
%d bloggers like this: