2020 ஆம் ஆண்டு எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப் போகுது… பலன்கள்மற்றும் பரிகாரங்கள் என்ன தெரியுமா?

எண்கள் மனிதர்களின் அதிர்ஷ்டத்தை தீர்மானிக்கின்றன. ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோள்களின் ஆதிக்கமுடையவை. இந்த கோள்களின் செயல்பாட்டிற்கேற்ப அந்த எண்களுக்கு உரியவர்களின் வாழ்க்கையில் பொதுவான குணங்களும், நிகழ்வுகளும் அமைகின்றன என்கிறது எண் கணித சாஸ்திரம். 2020 ஆம் ஆண்டினை கூட்டும் போது கூட்டுத்தொகை 4 வருகிறது. இது ராகுவின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டு என்று சில எண்கணித நிபுணர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 1- 1 – 2020 ஐ கூட்டினால் அது கூட்டுத்தொகை 6 வருவதால் அது சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த ஆண்டாக வருகிறது. இந்த ஆண்டு எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம். எந்த கோவில்களுக்கு போக வேண்டும் என்று பார்க்கலாம். ஒவ்வொருவர் பிறந்த தினத்தின் கூட்டுத்தொகையைக் கொண்டு அதற்கான அதிர்ஷ்ட எண்கள் கண்டறியப்படுகிறது. ஜோதிடத்தில் சூரியனுக்கு இராகுவும், சந்திரனுக்குக் கேதுவும் பகை எனப்படித்துள்ளோம். சூரிய சந்திரர்களின் நிழலே இராகு, கேதுக்களாகும். எனவே தான் இவர்கள் எண் கணித சாஸ்திரத்தில் நட்பாக வருகிறார்கள். 2020ஆம் ஆண்டு கிரகங்கள் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. முக்கிய கிரகங்கள் ஆட்சி பெற்று அமர்வதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். பொருளாதார நிலை அபரிமிதமான வளர்ச்சி அடையும்.

2020ஆம் ஆண்டின் கூட்டுத்தொகை 4. 1. 1. 2020 6 கூட்டு எண் 6 மகத்தான வெற்றிகரமான நாடாக இந்தியா மாறும். அனைவருக்கும் நன்மை நடைபெறும் இந்தியா முழுவதும் ஒரு ஐஸ்வர்யம் செழிக்கும். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், ரயில்வே துறைகளில் வெற்றிகரமாக அமையும். நாடு முழுவதும் மழை பெய்யும் செழிப்பான ஆண்டாக அமையும். தமிழ்நாட்டில் நிறைய மாறுதல்கள் ஏற்படும். அணைகள் நிரம்பி வழியும். 2020ஆம் ஆண்டில் 1ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு அரசு வேலை செய்பவர்களுக்கும் அரசியலில் இருப்பவர்களுக்கு சிறந்த ஆண்டாக அமையும் வெற்றிகள் தேடி வரும். 2 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைகிறது. 3ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வருடம் முழுவதும் வெற்றியும் புகழும் வரும். 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நிறைந்த ஆண்டு. 5ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வருடம் முழுவதும் வெற்றி கிடைக்கும். 6ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. 7 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். 8ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு சோதனைகள் வந்தாலும் சாதனைகளாக மாற்றுவார்கள். 9 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இனி எந்த எண்ணில் பிறந்தவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம் என்று பார்க்கலாம்.

2020ஆம் ஆண்டு 1ஆம் எண் காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. சிறப்பான ஆண்டு காரணம் சூரியன் ஆதிக்கம் கொண்ட இந்த எண்ணிற்கு 2020 நன்மைகளையே செய்யும். தொழிலில் மேன்மை கிடைக்கும், பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேரும் வயது முதிர்ந்தவர்களுக்கு நோய் நொடிகள் நீங்கும். ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்யலாம். திருவண்ணாமலை கிரிவலம் வரலாம்.

சந்திரனை ஆதிக்கமாகக் கொண்ட 2ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அமோகமான ஆண்டாக அமைந்துள்ளது. திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் புத்திர பாக்கியம் தாமதப்பட்டவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். மாணவர்களுக்கு மகத்தான ஆண்டாக அமையும் கூத்தனூர் சென்று சரஸ்வதியை தரிசனம் செய்து விட்டு வாருங்கள் நல்லதே நடக்கும். பொற்காலமான ஆண்டாக அமையும், திங்களூர் சந்திரன் கோவில் வழிபாடு கீழப்பெரும்பள்ளம் கேது பகவானை வணங்கலாம்.

குருவின் ஆதிக்கம் நிறைந்த 3ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு சற்றே சோதனைகள் நிறைந்த ஆண்டுதான். பயணங்கள் செல்லும் போது விநாயகரை வணங்கி விட்டு செல்லுங்கள். திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். ஆஞ்சநேயரை தரிசனம் செய்வது சிறப்பு. வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் குருபகவானை தரிசனம் செய்வது சிறப்பு.

ராகுவின் ஆதிக்கம் நிறைந்த 4ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020 செழிப்பான ஆண்டு. பலதரப்பட்ட வருமானங்கள் வரும் உழைப்பு அதிகமாகும். உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைக்கும். இந்த ஆண்டு சுபமான காரியங்களில் முதலீடு செய்யலாம். சொத்துக்கள் வாங்கலாம். வீடு மனை வாங்கலாம். பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபடலாம். ராகு காலத்தில் துர்க்கா தேவியை வணங்கலாம். செவ்வாய்கிழமைகளில் துர்க்கையை வணங்குங்கள். சோதனைகளை சமாளித்து விடுங்கள்

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள். சுப விரையங்கள் நடைபெறும். குபேரன் அருள் கிடைக்கும். புதன்கிழமைகளில் திருவெண்காடு சென்று வணங்கி வரலாம். மதுரை மீனாட்சி சொக்கநாதரை புதன்கிழமைகளில் வணங்கி அர்ச்சனை செய்யலாம். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

சுக்கிரன் ஆதிக்கம் பெற்றவர்கள். இனிமையானவர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல விமோசனம் கிடைக்கும். வெளிநாடுகளில் நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்விச்செல்வம் சிறப்பாக அமையும் செழிப்பாக அமையும். ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஆரோக்கியலட்சுமி தாயாரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கேதுவின் சாரம் பெற்ற 7 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டில் சோதனைகள் வந்தாலும் அதனை சாதனைகளாக மாற்றலாம். திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனை வழிபடலாம். கேதுவின் நாயகன் சித்திரகுப்தனை வணங்குவதால் வருடம் முழுவதும் சாதனைகள் படைக்கலாம். கற்பக விநாயகரை வணங்கலாம். சனிக்கிழமைகள் தோறும் விநாயகரை வணங்கலாம். அருகில் உள்ள ஐயப்பன் கோவிலை சென்று வணங்குங்கள். விரயங்களை தவிர்க்கலாம்.

எட்டாம் எண் மகத்தான எண் சக்தி வாய்ந்த எண் எனவே இந்த எண் காரர்களுக்கு அற்புதமானதாக அமையும். 8ஆம் எண்ணின் கூட்டுத்தொகையில் பிறந்தவர்களுக்கு 2020ஆம் ஆண்டு நன்மைகள் தீமைகள் சரியாக கலந்த ஆண்டு சனியும் ராகுவும் இணைந்தால் எப்படி இருக்கும். சனி பகவானை சணிக்கிழமையில் வணங்குங்கள். சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை வணங்குங்கள். ஆஞ்சநேயர் கோவிலுக்கும் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வணங்கி வரலாம்.

செவ்வாய் ஆதிக்கம் நிறைந்த 9 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பொற்காலமான ஆண்டாக அமைந்துள்ளது. நிறைய வெற்றிகள் கிடைக்கும். அரசு துறையில் இருப்பவர்களுக்கும், காவல்துறை, தீயணைப்புத்துறை, ராணுவத்துறையில் இருப்பவர்களுக்கு மகத்தான ஆண்டாக அமையும் வெற்றியை நோக்கி செல்வார்கள். எதற்கும் டென்சன் ஆகாதீங்க கோபத்தை கட்டுப்படுத்தினால் நிறைய வெற்றிகள் தேடி வரும். பதவி உயர்வு வரும். பெண்களுக்கு சக்தி நிறைந்த ஆண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகளும் வருமானமும் தேடி வரும். தன்வந்திரி பகவானை வணங்குங்கள். வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள். அங்குள்ள முத்துக்குமாரசாமியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

Advertisements

Next Post

இந்தியா-வில் 5ஜி செல்போன் சேவை அறிமுகம்.. தொழில்நுட்ப அமைச்சர் 'ரவிசங்கர் பிரசாத்' பேட்டி..!!

Mon Dec 30 , 2019
இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவை, பரிட்சார்த்த முறையில் துவங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செல்போன் சேவைகள் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப இந்தியா தன்னை மாற்றிக் கொண்டு வருகிறது. தற்போது 4ஜி தொழில்நுட்பத்தில் செல்போன்கள் இயக்கப்படும் காலகட்டம் வந்துள்ளது. 3ஜியை விடவும் இது வேகமான இணையதள வசதியை கொடுக்கிறது. இந்த […]

Actress HD Images

Advertisements