7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

வேலூர் காட்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் பள்ளியில், 7-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்களின் உறவினரான ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கடப்பகுண்டாவைச் சேர்ந்த கோபிநாத் என்ற பணம் படைத்த 30 வயது இளைஞர் தனக்கு உங்கள் மகளை கட்டிக்கொடுங்கள் என்று கேட்க, பெரிய சம்பந்தம் வருதே என்ற ஆசையில் சிறுமிகளின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் 9ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமியின் ஜாதகம் கோபிநாத் ஜாதகத்தோடு பொருந்தவில்லை. அதே சமயம் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியின் ஜாதகம் 10 பொருத்தங்களோடு பொருந்த அவரை திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஆனால் சிறுமியோ நான் படிக்கப்போகிறேன் என்று அடம்பிடிக்க, சிறுமியை மிரட்டி, சித்தூர் அருகே உள்ள கோவிலில் கோபிநாத்துக்கு திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்னர் கோபிநாத், தன் மாமனார் வீட்டிலிருந்துள்ளார்.

இந்நிலையில் பள்ளியில் கல்வி சான்றிதழ் வாங்குவதற்காகத் தாலியைக் கழட்டி வைத்துவிட்டு சிறுமி பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியர்களிடம் இதுகுறித்து கூறி அழத் தொடங்கியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போன ஆசிரியர்கள், சமூக நலத்துறை அலுவலகர்களுக்கு கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் உதவியுடன் மாணவியை மீட்டதோடு, கோபிநாத், மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க, சித்தூர் மாவட்ட எஸ்.பிக்கு வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி பரிந்துரைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisements

fogpriya

Next Post

60 படங்கள், 45 விருதுகள் "திரிஷா" -வின் 17 வது ஆண்டு திரையுலக கொண்டாட்டம்..!

Sat Dec 14 , 2019
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிளில் ஓருவர் தான் திரிஷா.இவரது முழு பெயர் திரிஷா கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளம் வைத்துள்ளார் இவர் மற்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார் திரிஷா. திரிஷா தனது திரையுலக வாழ்க்கையை 1999ல் துவங்கினார். பிரசாந்த் சிம்ரன் நடித்த ஜோடி எனும் படத்தில் சிம்ரனின் நண்பர்களில் ஒருவராக வருவார். பின்பு ஹீரோயின் ஆக நடித்த திரைப்படம் ஷாம் நடித்த லேசா லேசா இப்படம் […]
%d bloggers like this: