கஞ்சா கும்பல் ஆக்கிரமிப்பு பூங்காவாக மாற்றிய போலீசார்..!

சென்னையில் கஞ்சா கடத்தல் கும்பலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை மீட்ட போலீசார், மாநகராட்சியிடம் ஒப்படைத்து அதை பூங்காவாக மாற்றி நடவடிக்கைக்கு அப்பகுதியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை டி.பி. சத்திரத்தில் வசித்து வரும் பிரபல கஞ்சா பெண் வியாபாரி கிருஷ்ணவேணி, 80 வயதை கடந்த கஞ்சா கிருஷ்ணவேணி காவல் துறையின் பதிவேட்டில் சரித்திர பதிவேட்டு குற்றவாளி. 80 வயது மூதாட்டியா கஞ்சா கடத்தலிலும், ஆக்கிரமிப்பிலும் ஈடுபட போகிறார் என எழும் கேள்விக்கு, காவல் துறையில் தற்போது வரை அவர் மீது நிலுவையிலுள்ள வழக்குகளே பதில் என்கின்றனர் காவல் துறையினர். கஞ்சா கடத்தல் வழக்கில் பலமுறை கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டவர் கஞ்சா கிருஷ்ணவேணி. மதுரை, தேனி மாவட்டங்களிலும், ஆந்திராவிலும் இவர் கஞ்சா கடத்தி விற்பனை செய்ததால் அங்கிருந்து தனது தொழிலுக்காக பலரையும் அழைத்து வந்து டி.பி.சத்திரம் பகுதியில் குடி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக கஞ்சா விற்பனையில் கொடி கட்டி பறந்த கஞ்சா கிருஷ்ணவேணி டி.பி.சத்திரம் பகுதியில் இருந்த சுமார் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்ததாக கூறுகின்றனர் காவல் துறையினர். 

ஆக்கிரமிப்பு செய்யபட்ட இடத்தில் தன்னுடன் கஞ்சா கடத்தல் தொழில் ஈடுபட்டு வருபவர்களை குடும்பத்தோடு குடியமர்த்தி அந்த இடத்தை நிரந்தரமாக சொந்தமாக்க அவர் முயன்று வந்ததாகவும், அந்த ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருக்க ஒரு பகுதியில் சொந்த செலவில் கோவில் ஒன்றையும் கஞ்சா கிருஷ்ணவேணி கட்டியெழுப்பியதாகவும் என்றும் கூறுகின்றனர் காவல் துறையினர். இதற்கிடையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளுக்கு கஞ்சா கிருஷ்ணவேணியின் கும்பலிடம் இருந்து தான் கஞ்சா சப்ளை செய்யபடுவதை தெரிந்து கொண்ட போலீசார் அந்த கும்பலின் செயல்பாட்டை முடக்கிக் கூண்டோடு கைது செய்ய திட்டமிட்டனர்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரின் உத்தரவுபடி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இருந்த ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கஞ்சா கிருஷ்ணவேணி ஆக்கிரமித்த இடத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். மாநகராட்சி மூலம் அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம் என்பதை உறுதிபடுத்தி அப்போதே ஆக்கிரமிப்பை அகற்றி மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மாநகராட்சி பூங்காவாக மாற்றி தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். டி.பி சந்திரம் பகுதியில் இடத்தை ஆக்கிமிரத்து கொண்டு அப்பகுதி மக்களுக்கும் பெரும் தொந்தரவாக கஞ்சா கும்பல் செயல்பட்டு வந்ததாகவும், தற்போது நிம்மதியாக இருப்பதாக காவல் துறையினர் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர்.

Advertisements

Next Post

உயரிய கட்டிடங்களின் மீது சாகசம் புரியும் இளைஞன்

Wed Aug 21 , 2019
உக்ரைனில் இளைஞர் ஒருவன் உயரிய கட்டிடத்தின் மீதிருந்து தலைகீழாகத் தொங்கியபடி படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளான். சைய் (Shiey) என அழைக்கப்படும் நபர் ஒருவர் உலகின் பல உயரிய கட்டிடங்கள், கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சங்களுக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி அனாயசமாக நடத்தல் போன்ற காரியங்களைப் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான். தனது நண்பனின் உதவியோடு முகத்தை அடையாளம் காட்டிக் கொள்ளாது ஐரோப்பாவின் உயரிய கட்டிடங்களில் சாதனை […]
%d bloggers like this: