ப.சிதம்பரத்தின் அரசியல் வாழ்வும்.. பல்வேறு சர்ச்சைகளும்..!

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைதாகியுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், தமது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார்.

ஹாவர்ட் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற ப.சிதம்பரம், 1984ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சிவகங்கை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசுகளில் வர்த்தக அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து மூப்பனார் தலைமையில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டபோது, அதில் இருந்த சிதம்பரம், 1996ல் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார். வாட் வரி விதிப்பு போன்ற முக்கிய முடிவுகளை செயல்படுத்தியதில் ப.சிதம்பரத்தின் பங்களிப்பு பெரிதாக கருதப்படுகிறது.

விவசாயிகளுக்கான 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்தும், 2009ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்க இது உதவியாக இருந்தது. 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர் வென்றதும் சர்ச்சைக்கு ஆளானது.

அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் 3500 வாக்கு வித்தியாசத்தில் ப.சிதம்பரத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பல்வேறு சந்தேகங்களை கிளப்பும் வகையில் இறுதியாக 3354 வாக்குவித்தியாசத்தில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உள்துறை அமைச்சராக பதவியேற்ற ப.சிதம்பரத்திற்கு கடுமையான பணிகள் காத்திருந்தன. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.

அவர் உள்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மும்பையில் நடைபெற்ற மூன்று தீவிரவாதத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி தமது சொந்த கட்சிக்காரர்களாலேயே சிதம்பரம் அகந்தை மிக்கவர் என்று கருதப்பட்டார்.

1984ல் சீக்கியருக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு காரணம் எனக் கூறப்பட்டு வந்த ஜகதீஷ் டைட்லர் குற்றமற்றவர் என்று கூறியதாலும் சிதம்பரம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானார். 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உள்துறை அமைச்சகத்தில் இருந்து அவர் மீண்டும் நிதியமைச்சராக மாற்றப்பட்டார்.

பொதுத்துறை வங்கிகளை கடன் வழங்குவதில் கட்டுப்படுத்த தவறியதாகவும் சிதம்பரம் மீது புகார் உள்ளது. இதனால் அரசு சார்புடைய பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன்கள் பெருமளவுக்கு கூடியது.

2010ம் ஆண்டில் சிபிஐ அதிகாரிகள் ஷோரபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் தற்போதைய உள்துறை அமைச்சரான பாஜக தலைவர் அமித் ஷாவை கைது செய்தனர். இந்த கைது சம்பவத்தில் அமித் ஷா சிறையில் அடைக்கப்படவும் ப.சிதம்பரம் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.

Advertisements

Next Post

பாரதிராஜாவின் சாதனையை முறியடிப்பதே முழுமையான சாதனை : பார்த்திபன்

Fri Aug 23 , 2019
திரைத்துறையில் பாரதிராஜாவின் சாதனையை முறியடிப்பதே முழுமையான சாதனை என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ்7′ என்ற படம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது. இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஃபாப்டா அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் […]

Actress HD Images

%d bloggers like this: