இவங்க நம்ம லிஸ்டுலே இல்லையே..! – காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல்காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில், தமது முடிவை திரும்பப்பெற அவர் மறுத்துவிட்டார். இதனால் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக நேற்று காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடியது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


ராகுல் காந்தி தமது ராஜினாமா முடிவை திரும்பப்பெற்று மீண்டும் கட்சித் தலைவராக நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அதனை ராகுல் காந்தி ஏற்கவில்லை. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத் மீண்டும் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக கூட்டத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி காரியக் கமிட்டி கூட்டத்தில் தலைவர் நியமனத்தை விடவும் காஷ்மீர் பிரச்சினையே பிரதானமாக விவாதிக்கப்பட்டதாக கூறினார்.


காஷ்மீரில் வன்முறை குறித்த செய்திகள் கவலையளிப்பதாக தெரிவித்த ராகுல்காந்தி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Next Post

மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு - கேரளா

Mon Aug 12 , 2019
மழை வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு – கேரளா கேரளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் சுமார் இரண்டரை லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கோழிக்கோடு, மலப்புரம், திருசூர், வயநாடு , கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி அவசியம் ஏற்பட்டால் ஒழிய வீடுகளை […]
%d bloggers like this: