பால் விலை உயர்வை பலரும் அரசியலாக்குவதாக தமிழிசை குற்றச்சாட்டு

பால் விலை உயர்வை பலரும் அரசியலாக்கி வருவதாக குற்றம்சாட்டி உள்ள தமிழிசை சௌந்தரராஜன், பால் விலை உயர்வால் பொதுமக்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், படிப்படியாக விலை உயர்த்தப்பட்டிருந்தால் பாதிப்பு இருந்திருக்காது என்றும் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்ததை பாராட்டி பாஜக பிரமுகர் ராஜலட்சுமி மண்டா கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக சென்னை வந்த அவரை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் இல.கணேசன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ராஜலட்சுமி மண்டாவின் இருசக்கர வாகனத்தில் தமிழிசை சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் மோடியை எதிர்த்தவர்களும் தற்போது அவரை ஆதரித்து வருவதாகவும் கூறினார்.

Advertisements

Next Post

புதிய நேரடி வரி விதிகளில் நடுத்தர மக்களுக்கு வரிச் சலுகை

Tue Aug 20 , 2019
வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைக்கும் புதிய நேரடி வரி விதிகள் வரைவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திங்கட்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.  கடந்த ஜூலை 31ஆம் தேதியே புதிய நேரடி வரி விதிகளை நிதி அமைச்சகம் வெளியிட இருந்தது. ஆனால், அன்று வெளியாகவில்லை. சில நாட்கள் தாமத்துக்குப் பின், ஆகஸ்ட் 19ஆம் தேதி புதிய நேரடி வரி விதிகள் வரைவு நிதி நிதி அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நித அமைச்சர் நிர்மலா சீதாராமன் […]
%d bloggers like this: