காஷ்மீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் சிறப்பான கருத்தை கூறினார் – தமிழிசை

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி சிறப்பான கருத்தை கூறியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் வகையில் சென்னை வடபழனியில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்திரராஜன், இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது மன ஆறுதல் அளிப்பதாகவும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை குறைய வேண்டும் என்றும் கூறினார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினி சிறப்பான கருத்தை சொன்னதாகவும் அதனை அனைவரும் எதிர்த்த பின்னும் அந்த கருத்தை மறுப்பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisements

Next Post

ஆவின் பால் விலை உயர்வு..!

Sun Aug 18 , 2019
பால் கொள்முதல் விலை உயர்வைத் தொடர்ந்து, அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், வரும் 19 ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பசுந்தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை 4 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பால் […]
%d bloggers like this: