ஆபாச படம் பாக்குற எல்லாத்தையும் கைது செய்யமாட்டாங்க! யாரை கைது செய்வார்கள் தெரியுமா?

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதில், மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தநிலையில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால் ஆபாச படம் மற்றும் வீடியோக்களை, மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களில் வைத்திருந்தாலோ, அது தொடர்பான, ‘லிங்க்’களை பதிவிறக்கம் செய்தாலோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள்.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்களுக்கு, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை தெரியாமல் கூட பார்த்துவிட்டோம் என கூட கூற முடியாது. லிங்கை கிளிக் செய்தலே அவர்கள் மாட்டுவார்கள்.

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள், வீடியோக்கள் பார்ப்பது, அது தொடர்பான கீவோர்டை டைப் செய்வது, இதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தாலோ சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். 18 வயதுக்கு கீழே உள்ள ஆண், பெண் சம்மந்தப்பட்ட ஆபாச தொடர்பான வீடியோக்கள், வார்த்தைகள் எதனையும் பயன்படுத்தாதீர்கள். கட்டாயமாக தண்டிக்கப்படுவது உறுதி.

Advertisements

fogpriya

Next Post

சீன மொழியில் ரீமேக் ஆன படம் எது தெரியுமா?

Wed Dec 18 , 2019
மலையாளத்தில் மோகன்லால் நடித்த படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல் நடிக்க பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு படங்களையும் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். இந்தி, தெலுங்கு. கன்னட மொழியிலும் இப்படங்கள் ரீமேக் செய்து வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் சீன மொழியில் ‘ஷீப் வித்தவுட் எ ஷெபர்ட்’ பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. சீன நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறதாம். Advertisements

Actress HD Images

%d bloggers like this: