‘எம்மி’ விருது விழாவில் செக்ஸி உடையில் அசத்திய நடிகை..!

எம்மி விருது விழாவில் பங்கேற்ற நடிகை ராதிகா ஆப்தே செம செக்ஸியான உடையை அணிந்திருந்தார். சர்வதேச அளவில் சிறந்த டிவி தொடர்கள், மற்றும் டிராமாக்கள் என சின்னத்திரை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் விருதுதான் எம்மி விருது. 2019ஆம் ஆண்டுக்கான 47வது எம்மி விருது நியூயார்க்கில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர் நடிகைகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் இருந்து 8 திரை பிரபலங்கள் பங்கேற்றனர்

இந்தியாவின் சார்பில் எம்மி விருது 2019க்கு தொலைக்காட்சி தொடர் பிரிவில் ‘சேக்ரெட் கேம்ஸ்’ சீரிஸ் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. வெப் மூவீஸ் பிரிவில் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதேபோல் சிறந்த நடிகைக்கான பிரிவில் லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரிஸில் நடித்த பாலிவுட் மற்றும் தமிழ் உட்பட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை ராதிகா ஆப்தேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் இந்தியாவிலிருந்து இயக்குநர் அனுராக் காஷ்யப், ராதிகா ஆப்தே, நவாசுதின் சித்திக், குப்ரா செய்ட், கரன் ஜோஹர், ஜோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, விக்கிரமாதித்யா, ரோனி ஸ்க்ரீவாலா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அவர்கள் குரூப்பாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோக்களை நடிகை ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார்.

Advertisements

fogpriya

Next Post

அரசியல் கட்சி தொடங்கும் திட்டம்... ஒரே 'டிவீட்டில்' ஒட்டுமொத்த ஆர்மியை குஷியாக்கிய ஓவியா..!

Thu Nov 28 , 2019
அரசியல் கட்சி ஆரம்பிப்பது பற்றி நடிகை ஓவியா விளக்கம் அளித்துள்ளார். களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், மதயானைக் கூட்டம் என சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. பிக் பாஸ் முதல் சீசன் தான் ஓவியாவின் வாழ்வில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஓவியாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஆர்மிகள் […]
%d bloggers like this: