உலகிலேயே முதன்முறையாக மாற்றுத் திறனாளியை மேடையேற்றும் கோடீஸ்வரி..!

கலர்ஸ் ஒவ்வொரு வாரமும் வாழ்க்கையை சவால்களோடு எதிர்கொண்டு வரும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இந்நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்தை வீசும். ஆனால் வரும் வாரம் ஒரு படி மேலே சென்று உலக தொலைக்காட்சிகள் நிகழ்த்திராத சாதனையைச் செய்துள்ளது.

அதாவது காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி கௌசல்யா என்ற பெண்ணை நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்துள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சியில் வாய் பேசாத, காதுகேளாதவர்களை பங்கேற்கச் செய்து சிறப்பிப்பது உலக அளவில் இதுவே முதல்முறை.

அதில் மாற்றுத்திறனாளி கவுசல்யா தன் மகனின் குரலைக் கேட்க வேண்டும் என்பதே தன்னுடைய மிகப் பெரிய ஆசையாக நிகழ்ச்சியில் கூறுகிறார். அது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய தருணமாக இருக்கிறது.

அதுமட்டுமன்றி தன்னுடையக் குறையை கொஞ்சமும் பொருட்டாக மதிக்காத கவுசல்யா நிகழ்ச்சியை தன் வசமாக்கி ஒரு கோடிக்கான கேள்வி வரைச் செல்கிறார். அந்த கேள்விக்கான விடையைக் கூறி தமிழ்நாட்டின் முதல் கோடீஸ்வரியாகிறாரா என்பதே வரும் வாரத்திற்கான ட்விஸ்ட். நீங்களும் கவுசல்யாவின் இன்னும் பல சுவாரஸ்ய விஷயங்களைக் காண திங்களன்று காணுங்கள் கலர்ஸ் தமிழின் கோடீஸ்வரி.

Advertisements

Next Post

பூஜா ஹெக்டே-வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

Sat Jan 18 , 2020
Advertisements

Actress HD Images

%d bloggers like this: