உங்களுக்கு 70 வயசா? ரஜினிகாந்த் மற்றும் பேர் கிரில்ஸ் பங்கேற்ற Into the Wild நிகழ்ச்சியின் புது ப்ரோமோ ரிலீஸ்..!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது முதல்முறையாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். டிஸ்கவரி தொலைக்காட்சியில் உலகப்புகழ் பெற்ற பேர் கிரில்ஸ் உடன் ரஜினி காட்டுப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட Into The Wild என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். வரும் 23ம் தேதி அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவுள்ள நிலையில் தற்போது ஒரு சில காட்சிகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி பேர் கிரில்ஸுக்கு ஈடு கொடுத்து பல்வேறு சாகசங்களை செய்துள்ளார்.

முதலில் ரஜினி சின்ன வயதில் என்ன செய்துகொண்டிருந்தார் என பேர் கிரில்ஸ் கேட்க, “நான் பெங்களூரில் பஸ் கண்டக்டராக பணியாற்றி கொண்டிருந்தேன்” என கூறினார். அந்த பதிலை கேட்டு ஆச்சர்யபட்டுப்போன அவர், “சினிமாவுக்குள் எப்படி வந்தீர்கள்?” என கேட்டார். “நான் மெட்ராஸ் வந்து ஒரு இன்ஸ்டியூட்டில் சினிமா படித்தேன். அப்போது பழம்பெரும் இயக்குனர் பாலசந்தர் என்னை தேர்ந்தெடுத்து என் பெயரை மாற்றினார். என் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட்” என கூறினார் ரஜினி.

அதன்பின் இவ்வளவு புகழை எப்படி சமாளிக்கிறீர்கள் என கேட்டதற்கு “அதை நான் என் தலைக்கு எடுத்து செல்வதில்லை. நடிக்கும் வரை தான் ரஜினிகாந்த். அதன் பிறகு மறந்துவிடுவேன். நான் சிவாஜி ராவாக மாறிவிடுவேன். பின்னர் யாராவது வந்து ‘நீங்க தான் ரஜினிகாந்த்’ என சொன்னால், ‘ஆமாம் நான் தானே ரஜினிகாந்த்’ என நினைவுக்கு வரும்’ என பதில் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி தைரியமாக பல விஷயங்களை தன்னுடன் செய்ததை பார்த்து வியந்த பேர் கிரில்ஸ் “உங்கள் வயது என்ன என தெரிந்துக்கொள்ளலாமா?” என கேட்க, 70 என பதில் வந்ததும் வியந்துவிட்டார். இந்த வயதிலும் இவ்வளவு பிட்டாக இருக்கிறீர்கள். நீங்கள் தான் அனைவருக்கும் inspiration என கூறினார். மேலும் ரஜினிக்கு பேர் க்ரில்ஸ் ஷூ லேஸ் கட்டிவிட்ட காட்சியும் தற்போது வெளிவந்துள்ள வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

Advertisements

Next Post

தமிழக எல்லைகள் மூடப்படும்...முதல்வர் "எடப்பாடி பழனிசாமி" அதிரடி உத்தரவு!!

Fri Mar 20 , 2020
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட இடங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் […]
%d bloggers like this: