ரூ. 2 ஆயிரம் நோட்டு செல்லுமா? செல்லாதா? என்ன சொல்கிறார்கள் “ரிசர்வ் வங்கி” அதிகாரிகள்…

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா செல்லாதா என்ற சந்தேகம் மீண்டும் தொற்றிக் கொண்டிருக்க, இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இதற்கு பதிலளித்துள்ளனர். இதுகுறித்த வதந்திகளை நம்ப வேண்டாமென்று கேட்டுக்  கொண்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டில் 2 ஆயிரம் ரூபாய், 500 மற்றும் 200 ரூபாய் புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இதில், 2 ஆயிரம் ரூபாய் வந்தாலும் வந்தது; அது பற்றிய பல்வேறு தகவல்கள் மக்களை அவ்வப்போது நிம்மதியிழக்க செய்து வருகிறது.

இச்சூழலில், இந்தியன் வங்கியும் தன் பங்கிற்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியது. அதாவது வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்தியன் வங்கி  ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைக்காது என்பது தான் அந்த அறிவிப்பு. இதற்கு வங்கித்தரப்பில் கூறப்படும் விளக்கம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகவே வந்தால், சில்லரையாக மாற்ற மக்கள் வங்கிக்கு வருகிறார்கள். ஏ.டி.எம். கொண்டுவந்ததன் நோக்கமே இதனால் பயனின்றி போகிறது என்று கூறுகிறது.

இந்தியன் வங்கி வெளியிட்ட அறிவிப்பால், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லுமா, செல்லாதா என்ற கவலை மக்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்படியெல்லாம் இல்லை; 2 ஆயிரம் ரூபாய்  நோட்டு பயன்பாட்டில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டு குறித்து சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானவை. அத்தைய திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போது வரை இல்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.  வழக்கம்போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி பயன்படுத்தலாம் என்றனர்.

Advertisements

Next Post

கையில் பீர் பாட்டில்.. பக்கத்தில் ஸ்நாக்ஸ்... சியர்ஸ் வேறு.. பள்ளி மாணவிகளின் அட்டகாசம்!பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லை என்று சொல்வதா?

Sat Feb 22 , 2020
காட்டுப்பகுதியில் 3 மாணவிகள்.. அதுவும் ஸ்கூல் யூனிபார்மில்… அவர்கள் கையில் பீர்பாட்டில்.. பக்கத்தில் ஸ்நாக்ஸ்… சியர்ஸ் சொல்லி எல்லோருமே தண்ணி அடிக்கிறார்கள்.. இப்படி ஒரு வீடியோ வைரலாகி கடுமையான அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது. ஒரு வீடியோ வெளியாகி உள்ளது… அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் இவர்கள்.. மொத்தம் 4 பேர்.. நால்வருமே மாணவிகள். ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர்.. ஒரு மாணவி வீடியோ எடுக்க.. […]
%d bloggers like this: