ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கும்.. புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்… புகைப்படங்கள் வைரல்…

ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்திற்குப் பிறகு, பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். ரியோவுடன் இப்படத்தில் ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கிறார். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்து முழு ஈடுபாட்டுடன் உழைத்த மொத்த படக்குழுவும் தான் இன்று படம் இவ்வளவு அழகாக உருவாகி நிற்க காரணம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வேகமன் மற்றும் சைனாவில் கேங்டாக், குபுப் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தியுள்ளோம். படப்பிடிப்பு முடிந்த நிலையில் உடனடியாக போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளை இப்போது ஆரம்பித்துள்ளோம். விரைவில் படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளோம் என்றார். 

இப்படம் ரசிகர்களை ஈர்க்கும் குறிப்பிடதக்க பல அம்சங்கங்களை கொண்டிருக்கிறது. படத்தின் ஒரு பகுதி 125 தொழிற்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா கண்டிராத லொகேஷன்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள்.

ராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இளைஞர்களின் ஆதர்ஷம் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் RDX படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளில் இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

Advertisements

Next Post

முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை இந்துஜா.. மூக்குத்தி அம்மன்' அப்டேட்..!

Thu Jan 9 , 2020
ஆர்ஜே பாலாஜி, நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் இந்துஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்து வெளியான ‘எல்.கே.ஜி’ படம், பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையைத் தனது நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார் ஆர்ஜே பாலாஜி. இந்தப் படத்தைத் தயாரித்த வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது. எனவே, புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் […]
%d bloggers like this: