காதலுக்காக பேய் பிடித்ததாக நாடகம் ஆடிய பெண்– வெளுத்து வாங்கிய “திருநங்கை” பேயோட்டி..!

சேலத்தில் பேய் பிடித்ததாக நாடகம் ஆடிய பெண் ஒருவரை பூசாரி ஒருவர் பிரம்பால் கடுமையாக அடித்த வீடியோ வெளியாகி வைரல் ஆகிவருகிறது.

சேலம் கன்னங்குறிச்சி பாண்டியன் தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பம்சம் இதில் பூசாரியாக திருநங்கை ஒருவர் செயல்பட்டு வருவதுதான். அதனால் இந்த கோயிலில் வழிபடுவதற்கும் பூசாரியிடம் குறி கேடபதற்கும் கூட்டம் வர ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பேய் பிடித்ததாக சொல்லி இவரிடம் இளம்பெண் ஒருவரைக் கொண்டுவந்துள்ளனர். அந்த பெண்ணிடம் மூர்க்கமாக விசாரணை செய்த பூசாரி, அந்த பெண்ணின் உடலில் இருக்கும் பேயை ஓட்டுவதாக சொல்லி அவரை பிரம்பால் விளாசி எடுத்தார். இதனை தடுக்க வந்த அவரது பெற்றோரையும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார். அதன் பின் வலி பொறுக்க முடியாமல் அந்த பெண் தனக்கு பேய் பிடிக்கவில்லை என்றும் தனது காதலனைக் கைப்பிடிக்கவே இந்த நாடகம் ஆடியதாகவும் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்டு கோபமான பூசாரி இனி பொய் சொல்லமாட்டேன் என அந்த பெண் தன்னுடைய தந்தையை தாண்டி சத்தியம் செய்யவைத்து அவர்களை அனுப்பினார்.

Advertisements

fogpriya

Next Post

படத்திற்காக சீரியசா 'சிலம்பம்' மற்றும் 'தற்காப்பு' கலைகளைக் கற்கும் "சாக்‌ஷி அகர்வால்"

Mon Dec 16 , 2019
நடிகை சாக்‌ஷி அகர்வால், ஆக்‌ஷன் படத்தில் நடிப்பதற்காக சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைகளைக் கற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழில், ராஜா ராணி, காலா, விஸ்வாசம், ஆயிரம் ஜென்மங்கள் உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் சாக்‌ஷி அகர்வால். இப்போது சின்ட்ரெல்லா, டெடி உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 3 மூலம் புகழ் பெற்ற இவர், இப்போது ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் […]
%d bloggers like this: