கையில் பீர் பாட்டில்.. பக்கத்தில் ஸ்நாக்ஸ்… சியர்ஸ் வேறு.. பள்ளி மாணவிகளின் அட்டகாசம்!பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லை என்று சொல்வதா?

காட்டுப்பகுதியில் 3 மாணவிகள்.. அதுவும் ஸ்கூல் யூனிபார்மில்… அவர்கள் கையில் பீர்பாட்டில்.. பக்கத்தில் ஸ்நாக்ஸ்… சியர்ஸ் சொல்லி எல்லோருமே தண்ணி அடிக்கிறார்கள்.. இப்படி ஒரு வீடியோ வைரலாகி கடுமையான அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது. ஒரு வீடியோ வெளியாகி உள்ளது… அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் இவர்கள்.. மொத்தம் 4 பேர்.. நால்வருமே மாணவிகள். ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர்.. ஒரு மாணவி வீடியோ எடுக்க.. மற்ற 3 பெண்களும் தண்ணி அடிக்கிறார்கள். அது ஒரு காட்டுப்பகுதி போல உள்ளது.. பீர் பாட்டிலுடன் ஸ்நாக்ஸ், டம்ளர் உள்ளிட்டவைகளும் தயாராக கொண்டு வந்துள்ளனர்… பாட்டிலை திறந்து 3 பேருமே டம்பளரில் ஊற்றி குடிக்கிறார்கள்.

“பயமா இருக்குடி.. யாராவது வந்துட போறாங்க..”.. என்னடி இப்படி குடிக்கிறீங்க?”, பாட்டிலை தூக்கி போடுங்கடி… எங்க புள்ளைங்க எல்லாம் வேற லெவலு” இப்படி அந்த வீடியோவில் பேச்சுக்கள் பதிந்துள்ளன.. எந்த குற்ற உணர்வும் இந்த பெண்களிடம் தெரியவில்லை.. யார் வீட்டு பிள்ளைகளோ, என்ன பாடுபட்டு இவர்களை வீட்டில் படிக்க வைக்கிறார்களோ.. அதுவும் தெரியவில்லை. இந்த வீடியோவை பார்த்தால் அவர்கள் வயிறு எப்படி துடிக்கும் என்றும் நம்மால் யோசிக்க முடியவில்லை.

முன்பெல்லாம் மூலைக்கு மூலை தனியார் மதுபான கடைகள் இயங்கி வந்தன… அதனால் ஏதாவது ஒரு சில கிராமப்புறத்தில் அதுவும் காட்டுப்பகுதியில் மட்டும்தான் கள்ளச்சாராயம் விற்பார்கள்.. இது ஓரளவு குடிமகன்களின் எண்ணிக்கையை குறைத்தது.. சாராயக்கடையில் மதுவை வாங்கி கொண்டு, அதை யாருக்கும் தெரியாமல் குடித்து முடிப்பதற்கே அன்று ஆண்கள் நடுங்கி போய்விடுவார்கள்.

ஆனால் இன்று நிலைமை அப்படியே தலைகீழ்! மதுக்கடைகள் அரசு ஏற்று நடத்துகிறது… மறைவாக நடத்தப்பட்டவை அம்பலமாக நடக்கிறது.. பகிரங்கமாக குடிக்கிறார்கள்… இதில் சில இளம்பெண்கள் சிக்கி கொண்டுள்ளது வேதனையை தருகிறது. தமிழகத்தில் எத்தனையோ குடும்பங்கள் மதுவால் சின்னாபின்னமாகி விட்டன. பல உயிர்கள் பறிபோனாலும் மதுக்கடைகளை மூட முடியவில்லை. மதுவினால் பல குற்றங்கள் அதிகரித்தாலும், பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.

இதற்காக போராட்டங்களின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும்தான் அதிகமாகி வருகிறது.இந்நிலையில், சில பெண்களும் குடிக்க தொடங்கி உள்ளது, பெருத்த வேதனையாக உள்ளது. பெற்றோர்களின் சரியான கவனிப்பு இல்லை என்று சொல்வதா? அறியாமை என்று சொல்வதா? இவர்களிடம் கண்டிப்பு காட்டாமல், தொடர் கண்காணிப்பும், அரவணைப்பும் இருந்தாலே போதும் என்றுதான் தோன்றுகிறது… ஆனால், மதுவின் பிடியில் வயசு பெண்கள் சிக்கி கொண்டால், யாராலுமே அவர்களை காப்பாற்ற முடியாத அபாயத்துக்கு போவார்கள் என்பது நிச்சயம்!

Advertisements

Next Post

சர்ச்சை நாயகி "மீராமிதுன்" கழுத்தில் புதுத்தாலி.. நெற்றியில் குங்குமம்.. என புகைப்படம் வைரல்..அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Sat Feb 22 , 2020
நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் மீரா மிதுன். மாடலான இவர் 2016ஆம் ஆண்டிற்கான மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை பெற்றார். ஆனால் திருமணத்தை மறைத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் திருமணம் நடந்ததை மறைத்ததாகவும் கூறி அவர் வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த மீரா மிதுன், டேமேஜான பெயரை மீண்டும் […]
%d bloggers like this: