இன்னைக்காவது விளையாட முடியுமா??…..இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 2வது ஒருநாள் போட்டி

இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.


இரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 20 ஓவர் தொடரை இந்தியா 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து 3 ஒரு நாள் போட்டி ஆரம்பமானது. கயானாவில் நடந்த முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.2வது ஒரு நாள் போட்டி, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்றிரவு 7 மணிக்கு நடக்கிறது.


இந்த போட்டியில் வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அதுபோல மேற்கிந்திய தீவு அணி 20 ஓவர் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் இருப்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Next Post

இவங்க நம்ம லிஸ்டுலே இல்லையே..! - காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி

Sun Aug 11 , 2019
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல்காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில், தமது முடிவை திரும்பப்பெற அவர் மறுத்துவிட்டார். இதனால் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக நேற்று காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில் கூடியது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ராகுல் காந்தி தமது […]
%d bloggers like this: