வெளுத்து கட்டிய விராட் கோலி..!

கடந்த சில வருடங்களாக சைவ உணவிற்கு மாறியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, தான் அசைவம் சாப்பிட்டபோது, எடுத்துக் கொண்ட உணவு குறித்து மனம் திறந்து பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கடுமையான சைவ டயட்டை பின்பற்றி வருகிறார். இதன்மூலம் தனது சாதனைகளை எட்டிப்பிடிப்பது அவருக்கு எளிதாக உள்ளது. கடந்த 2017ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரட்டை சதத்தை விளாசிய விராட், அதையடுத்து சிக்கன் பர்கர், பிரைஸ் மற்றும் சாக்லேட் ஷேக் என வெளுத்து கட்டியதாக தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்திவரும் விராட் கோலி, ரன் மெஷின் என்று புகழ்ச்சிக்கு இணங்க பல்வேறு சாதனைகளை தான் மேற்கொண்டு வருவதுடன், இந்திய அணியின் மற்ற வீரர்களும் சாதிக்க தூண்டுகோலாக இருப்பவர். விராட் மற்றும் அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த சில வருடங்களாக சைவ உணவிற்கு மாறி அதை தொடர்ந்து வருகின்றனர். இதன்மூலம் இருவரும் தங்களுடைய உடலை பிட்டாக வைத்துக் கொள்கின்றனர்.

கடந்த 2017ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 235 ரன்களை குவித்திருந்தார். மும்பையில் நடைபெற்ற இந்த தொடரின் நான்காவது போட்டியில் இவர் இந்த சாதனையை எட்டியிருந்தார். அப்போது அங்கு நிலவிய வெப்பநிலையில் அவர் மிகுந்த களைப்பை உணர்ந்தார்.

இதையடுத்து வீட்டிற்கு சென்ற அவர், வாழைப்பழம், தண்ணீர் மற்றும் தாலுடன் கூடிய சாதத்தை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து தனது ஆலோசகரின் ஆலோசனைப்படி, அன்றைய இரவு சிக்கன் பர்கர், வறுவல் மற்றும் சாக்லேட் மில்க் ஷேக் போன்றவற்றை சுவைத்ததாக சுவையான நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் விராட்.

தொடர்ந்து அடித்த 235 ரன்களால் விராட்டின் உடல் மிகுந்த டிரையாக ஆனதால், தனது உணவுக் கட்டுப்பாட்டை நீக்கி பிடித்ததை சாப்பிட்ட விராட், அந்த நிலையிலும் பர்கரின் மேலிருந்த பன்னை நீக்கிவிட்டு கிழ் பன்னை மட்டும் சாப்பிட்டுள்ளார்.

Advertisements

fogpriya

Next Post

இணையதளத்தில் மிகவும் பிரபலமான "லில் பாப்" பூனை இறந்தது..!

Wed Dec 4 , 2019
சமூக வலை தளத்தில் இந்தப் பூனையை பின்தொடரும் பல மில்லியன் பேருக்கு, இதன் இறப்பு செய்தியை இந்தப் பூனையின் சொந்தகாரர் மைக் பிரிடாவ்ஸ்கி திங்கள்கிழமை அறிவித்தார்.குமிழ் வடிவான கண்கள், எப்போதும் முன்னே நீட்டி இருக்கும் நாக்கு என வழக்கத்திற்கு மாறான தோற்றத்தை கொண்டிருந்ததால் லில் பாப் பூனை மிகவும் பிரபலமானது. காட்டு பூனைக்குட்டியாக மீட்கப்பட்ட இந்தc, வளர்ச்சிக்குறைவு நோய் (குள்ளத்தன்மை) உள்பட பல உடல்நல பிரச்சனைகளோடு பிறந்திருந்தது. லில் பாப் பூனை வாழ்ந்தபோது, […]
%d bloggers like this: