உயரிய கட்டிடங்களின் மீது சாகசம் புரியும் இளைஞன்

உக்ரைனில் இளைஞர் ஒருவன் உயரிய கட்டிடத்தின் மீதிருந்து தலைகீழாகத் தொங்கியபடி படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளான்.

சைய் (Shiey) என அழைக்கப்படும் நபர் ஒருவர் உலகின் பல உயரிய கட்டிடங்கள், கைவிடப்பட்ட கட்டிடங்களின் உச்சங்களுக்கு சென்று மிகக் குறுகிய சுவரில் பிடிமானமின்றி அனாயசமாக நடத்தல் போன்ற காரியங்களைப் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறான். தனது நண்பனின் உதவியோடு முகத்தை அடையாளம் காட்டிக் கொள்ளாது ஐரோப்பாவின் உயரிய கட்டிடங்களில் சாதனை செய்த அந்த நபர், தற்போது உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் புதிய சாகசத்தை நிகழ்த்தியுள்ளான்.

கட்டிடத்தின் கைப்பிடிமானத்துக்காக வைக்கப்பட்ட கம்பியின் அடிப்பாகத்தில் பாதங்களை விட்டு, பிடிமானம் ஏற்படுத்திக் கொண்டு, அருகிலிருந்த சுவரின் விளிம்பில் இருந்து ஆபத்தை உணராது தலைகீழாகத் தொங்கியபடி கீவ் நகரின் அழகைக் காட்சிப்படுத்தியுள்ளான்.

Advertisements

Next Post

ஆபாச படம் பார்ப்பதில் top 10 நாடு எது ?

Wed Aug 21 , 2019
Advertisements

Actress HD Images

%d bloggers like this: