‘சூரரை போற்று’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்… ‘டீசர்’ வெளியாகும் தேதி அறிவிப்பு ..!!

நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளிவந்து சூர்யா ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படத்தின்
டீசர் வரும் 7-ம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சூர்யாவின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் ‘சூரரை போற்று’ படத்தின் அடுத்த அட்டகாசமான போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டீசர் வரும் 7ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது.

Advertisements

Next Post

'தனுஷ்' நடிக்கும் D41 படத்தின் டைட்டில் அறிவிப்பு..!

Mon Jan 6 , 2020
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய ‘பட்டாஸ்’ திரைப்படம் வரும் 16ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய சுருளி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. நெல்லையை பின்னணியாகக் கொண்ட இந்த […]

Actress HD Images

%d bloggers like this: