தமிழக எல்லைகள் மூடப்படும்…முதல்வர் “எடப்பாடி பழனிசாமி” அதிரடி உத்தரவு!!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட இடங்கள் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படும் என சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படி கொரோனா வைரஸ் தடுப்புக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழக அரசு இன்று மற்றுமொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் நாளை முதல் இம்மாதம் 31 ஆம் தேதிவரை மூடப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

Advertisements

Next Post

கொரோனா வைரஸ்: தமிழ் நாட்டின் பாதிப்பு நிலை என்ன?

Sat Mar 21 , 2020
கொரோனா அறிகுறிகளுடன் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 401ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இத்தாலியில் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் அங்கு 627 பேர் பலியாகியுள்ளனர். சீனாவை விட இறப்பு எண்ணிக்கையில் அந்த நாடு முன்னிலையில் உள்ளது. இத்தாலியில் இதுவரை கொரோனா வைரஸால் 4032 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் […]
%d bloggers like this: