தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம்..!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அணுசக்தித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு முன்மொழிந்துள்ளதாகவும், அதற்கான திட்டவரைவு தயாரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன.

இங்கு ஜிஎஸ்எல்வி மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட்டுக்கள் ஏவப்பட்டு வருகின்றன. தற்போது மூன்றாவதாக புதிய ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா போன்றே குலசேகரபட்டினத்திலும் இரண்டு ஏவுதளங்கள் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements

fogpriya

Next Post

எனை நோக்கிப் பாயும் தோட்டா குறித்து நள்ளிரவில் ட்வீட் போட்ட நடிகர் தனுஷ்..!

Fri Nov 29 , 2019
சென்னை: கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கிப் பாயும் தோட்டா பல கட்ட போராட்டங்களை தாண்டி ஒரு வழியாக இன்று வெளியாகிறது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்து, கெளதம் மேனனின் கடன் பிரச்சனைகளை தீர்த்துள்ளார். எனை நோக்கிப் பாயும் தோட்டா இன்றைய தினம் ரிலீசாகும் என கெளதம் மேனன் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் […]
%d bloggers like this: