யார் முதல்வர்? ரஜினியா,வைகோவா கொளுத்திப் போட்ட தமிழருவி மணியன்..!!

வைகோதான் முதல்வராக வேண்டுமென்று நினைத்தேன், இதை ரஜினியிடமே கூறியிருக்கிறேன் என்று தமிழருவி மணியன் பேசியுள்ளார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதாக பல செய்திகள் அதன்பின் வெளிவந்தன. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன ரஜினிகாந்தின் முடிவை வரவேற்ற மாவட்டச் செயலாளர்கள், முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை நிறுத்துவேன் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் நேற்று விழுப்புரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். ரௌத்ரம் இலக்கிய வட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்நிகழ்ச்சியில் ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன, ஏமாற்றம் என்ன என்ற தலைப்பில் தமிழருவி மணியன் பேசினார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னரே அவரை அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவரது அரசியல் நுழைவு குறித்த கருத்துகளைப் பேசிவருபவர் தமிழருவி மணியன். ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசவேண்டாம் என்று நினைக்கும் கருத்துகளை தமிழருவி மணியன் மூலம் பேசி ஆழம் பார்க்கிறார் என்ற விமர்சனமும் தமிழருவி மணியனின் பேச்சு குறித்து எழுந்து வருகின்றன.

அந்தவகையில் தமிழருவியின் பேச்சு சமீபகாலமாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ரஜினி முதல்வர் வேட்பாளராக வேறு ஒருவரை கைகாட்டுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து சில விவாதங்கள் எழுந்துவருகின்றன. ஒருவேளை அரசியலில் இறங்கி வெற்றிகிட்டாமல் போய்விட்டால் தப்பித்துக்கொள்வதற்கான கவசமாகவே வேறு ஒருவரை முதல்வர் என்று ரஜினி கைகாட்டுகிறாரா என்ற பேச்சுகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் பேசிய தமிழருவி மணியன், “ரஜினிகாந்த் ஒரு கருத்தைப் பேசுவதற்கு முன் ஓராயிரம் முறை யோசிப்பார். அப்படி யோசித்து பேசிவிட்டால் எந்த நிலையிலும் பின்வாங்கமாட்டார். பின்வாங்குதல் என்பது அவர் வாழ்க்கையிலேயே கிடையாது” என்று கூறினார்.

மேலும் அவர், “எனது 53 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்று நான் ஆசைபட்டது வைகோ ஒருவரைத்தான். இதை ரஜினிகாந்திடமே ஒழிவுமறைவு இன்றி கூறியிருக்கிறேன்” என்றார்.

“அதிமுகவில் உள்ள மேல் மட்டத்தில் உள்ளவர்களை விட்டிவிடலாம். ஆனால் அடிமட்டத்தில் இருக்கும் எம்ஜிஆரின் ரசிகர்கள் ரஜினி பக்கம் வரவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisements

Next Post

செம கியூட்டா...சுடிதாரில் செம அழகாக.. போஸ் கொடுத்த "யாஷிகா ஆனந்த்".. குவியும் லைக்ஸ்..!!

Mon Mar 9 , 2020
நடிகை யாஷிகாஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது. வெகு விரைவில் இந்த படங்கள் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு […]
%d bloggers like this: