தமிழக சட்டசபையில் இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம்… பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!!

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை விவாதம் இன்று தொடங்குகிறது. கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் அறிக்கையை வாசித்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் இடம் பெற்றன.இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

காலை 10 மணிக்கு கேள்வி நேரம் முடிந்ததும், zero hour எனப்படும் நேரமில்லா நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசைக் கோரியுள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு விவாதங்களுக்குப்பின்னர், 20ம் தேதி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்க உள்ளார்.

Advertisements

Next Post

“எனது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து செல்கிறது” –புலம்பிய தேசிய விருது வாங்கிய இயக்குனர்…!

Mon Feb 17 , 2020
தேசிய விருது வாங்கிய “வெயில்”, “காவியத் தலைவன்”, “அரவான்” மற்றும் “அங்காடித் தெரு” போன்ற படங்களை இயக்கியவர் வசந்த பாலன். இவர் நீண்ட நாட்களாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஜி.வி. பிரகாஷ், ராதிகா சரத்குமார், ரோபோ சங்கர், பாபி சிம்ஹா, சூரி மற்றும் பலர் நடித்த “ஜெயில்” என்னும் படத்தை இயக்கியுள்ளார். ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும்.ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும்.ஷூட்டிங் தடையின்றி […]
%d bloggers like this: