முதன் முறையாக நடிகை “நயன்தாரா” தன் காதல் வாழ்க்கை, காதலரை குறித்து ஓபன் டாக்..

2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய Zee சினி விருதுகள் 2020 விருது விழாவில் கமல்ஹாசன், போனி கபூர், இயக்குநர் சங்கர், லோகேஷ் கனகராஜ், ஏ.ஆர்.ரஹ்மான், நயன்தாரா, சமந்தா, தனுஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.  இவ்விழாவில் லட்சணமாக புடவையணிந்து சிம்பிளாக வந்த நயன்தாரவை அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். சமீப காலமாகவே எந்த ஒரு விருது விழாவிற்கு தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஜோடியாக வந்து அரங்கத்தை அலங்காரப்படுத்தும் நயன்தாரா இந்த விழாவிற்கு காதலர் விக்கி இல்லாமல் தனியாக வந்தது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.

இந்த விருது விழாவில் நயனுக்கு ஃபேவரைட் நடிகை விருதும், இந்திய சினிமாவில் பெண்களுக்கு முன்மாதிரியாக இருப்பதால் ஸ்ரீதேவி விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் அவ்விழாவில் பேசிய நயன்தாராவிடம் காதல் வாழ்க்கை பற்றி கேட்க அதற்கு அவர், காதல் தன்னை  அதிக அளவில் சந்தோஷப்படுத்தியுள்ளதாகவும், அது புகைப்படங்களில் தெரிகிறது என்றார். மேலும் காதல் தனக்கு மிகவும் அதிகமான மன நிம்மதியை தருவதாக கூறி புன்னகைத்தார்.   

Advertisements

Next Post

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் ‘நான் சிரித்தால்’ ட்ரைலர் வைரல் .!

Tue Jan 7 , 2020
ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும் நான் சிரித்தால் ட்ரைலர் வெளியாகி வைரலாகிவருகிறது. அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம்  ‘நான் சிரித்தால்’. இப்படத்தை மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய இரு படங்களையும் தயாரித்த, இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக புதுமுக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் இயக்குனர் கே.எஸ் […]

Actress HD Images

%d bloggers like this: