தோழியை மணமுடிக்க ஆணாக மாறிய பெண்..! மதுரையில் நடந்த திருமணம்…

மதுரையில் கல்லூரி தோழியை காதலித்து வந்த பெண் ஆணாக மாறி சட்டப்படி திருமணம் செய்துகொண்ட சம்பம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது நான்கு வருடமாக விஷ்ணுபிரியா என்ற மாணவியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த சூழலில் ஆண், பெண்ணை போல இருவரும் இருந்ததால் பவித்ராவின் பெற்றோர் விஷ்ணு பிரியாவுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு கண்டித்துள்ளனர்.

ஆனால் இருவருடைய பழக்கம் காதலாக மாறியதால் அதனை முறித்துக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. பெற்றோர் தரப்பிலும் எதிர்ப்புகள் தீவிரமானதால் திருநங்கை சாயலை கொண்டிருந்த விஷ்ணுபிரியா, தோற்றத்தில் தன்னை ஆணாக பாவித்துக்கொண்டு பவித்ராவின் வீட்டுக்கு பெண் கேட்க சென்றார். ஆனால் பவித்ராவின் பெற்றோர் விஷ்வந்த் என மாற்றிக்கொண்ட விஷ்ணுபிரியாவை திட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து பவித்ரா தனது வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டுக்கு சென்று விட்டார். அங்குள்ள ஒரு கோவிலில் விஷ்வந்த்தும், பவித்ராவும் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர்களது திருமணத்துக்கு பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், இருவரும் மதுரையில் உள்ள கண்ணம்மா என்ற திருநங்கையிடம் உதவி தேடி சென்றனர். இளஞ்சோடியை அரவணைத்த கண்ணம்மா, அவர்களின் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யக்கோரி மதுரை மாவட்ட சட்ட பணிகள் ஆய்வு குழு மையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு பவித்ராவும், விஷ்வந்த்தும் அதிகாரிகள் முன்னிலையில் சட்டப்படி மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர். அப்போது அங்கிருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தி அனுப்பினர்.

Advertisements

Next Post

"ரஜினி"-யின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா? வந்திறங்கியது அசத்தலான அப்டேட்..!!

Tue Feb 25 , 2020
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், […]
%d bloggers like this: