நடிகையுடன் காதல்.. நள்ளிரவில் புகைப்படத்தை வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்திய… இந்திய கிரிக்கெட் வீரர்…!!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பண்டியா நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்த தன் காதல் விஷயத்தை ஒப்புக் கொண்டுள்ளார். நடாஷா ஸ்டான்கோவிக் என்ற செர்பிய நாட்டை சேர்ந்த நடிகையை தான் ஹர்திக் பண்டியா காதலித்து வருகிறார். தன் காதலை சரியாக 2020 துவங்கிய உடன் உலகுக்கு அறிவித்து அதிரடி காட்டி இருக்கிறார் அவர். நடாஷா ஸ்டான்கோவிக் தமிழ் படமான அரிமா நம்பி படத்தில் தோன்றி இருக்கிறார் என்பது ஆச்சரியமான தகவலாக இருந்தது. ஹர்திக் பண்டியா கடந்த சில மாதங்களாக இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டு, பின் அதில் இருந்து மீண்டு வருகிறார்.

நீண்ட நாட்களாகவே அவர், நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலிக்கிறார் என்ற கிசுகிசு வலம் வருகிறது. எனினும், இருவரும் இதை ஒப்புக் கொள்ளவில்லை. இருவரும் சாதாரண நண்பர்கள் போலவே காட்டிக் கொண்டனர். இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு துவங்கும் போது, நள்ளிரவு 12 மணிக்கு ஹர்திக் பண்டியா இன்ஸ்டாகிராமில், நடாஷா ஸ்டான்கோவிக் உடன் ஸ்டைலாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதன் தலைப்பாக, “வருடத்தை என் வானவேடிக்கையுடன் துவங்குகிறேன்” என பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

சுமார் 12 லட்சம் பேர் அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளனர். பலரும் யார் இந்த நடாஷா ஸ்டான்கோவிக் என தேடி வருகின்றனர். இவர் அதிக பிரபலமான நடிகை அல்ல. மிகச் சில படங்களில் நடனம் ஆடி உள்ளார். செர்பிய நாட்டை சேர்ந்தவர் என்றாலும், இந்தியாவில் விளம்பரங்களிலும், பாலிவுட் படங்களில் பாடல்களிலும் நடனம் ஆடி வருகிறார். இரண்டு தென்னிந்திய படங்களிலும் அவர் பாடல்களில் நடனம் ஆடி உள்ளார். அதில் ஒன்று தான் அரிமா நம்பி. அந்தப் படத்தில் வரும் “நானும் உன்னில் பாதி” என்ற பாடலில் அவர் நடனம் ஆடி உள்ளார். எனினும், அவர் தமிழ்நாட்டில் பிரபலமாகவில்லை. 2014இல் ஹிந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற “நாச் பாலியே” என்ற நடன நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஹர்திக் பண்டியா காயம் முழுமையாக குணமாகி உள்ள நிலையில், மீண்டும் விரைவில் போட்டிகளில் ஆட இருக்கிறார். நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் நியூசிலாந்து சென்று இந்தியா ஏ அணியில் ஆட இருக்கிறார். அப்போது சிறப்பாக ஆடும்பட்சத்தில் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

Advertisements

Next Post

3 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்... ஓட்டு போடும் நேரத்தில் நாசம் செய்த நபர்..நெடுவாசலில் பரபரப்பு!

Thu Jan 2 , 2020
ஒரு பக்கம் ஊர்மக்கள் ஓட்டுப்போட்டு கொண்டிருந்த நேரம். 3 வயது குழந்தையை நாசம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்!புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஆருகே உள்ளது நெடுவாசல் கிழக்கு கிராமம். இங்கு வசித்து வந்தவர் பாலமுருகன் 32 வயதாகிறது. 10 வருஷத்துக்கு மேல் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சில வருடத்துக்கு முன்புதான் ஊர் திரும்பினார். கல்யாணம் செய்து குழந்தை குட்டியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், 30ம் தேதி நெடுவாசல் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் […]
%d bloggers like this: