விளையாட்டு வினையாக முடிந்த சோகம்..” ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம்..!

சென்னை அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு 7 வயதில் கீர்த்திவாசன் என்ற மகன் உள்ளான். தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த கீர்த்திவாசன், நேற்று முன்தினம் தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராத விதமாக ஊஞ்சலில் கட்டப்பட்டிருந்த கயிறு, சிறுவனின் கழுத்தில் சிக்கி இறுக்கிக்கொண்டது. அதில் இருந்து மீண்டு வர, சிறுவன் நீண்ட நேரம் முயற்சி செய்து, இறுதியில் மயக்கம் அடைந்தான். இதனைக்கண்டு அதிர்ந்த சிறுவனின் பெற்றோர், அவனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் கீர்த்திவாசன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுவன் உயிரிழந்தது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

fogpriya

Next Post

'அருவி' பட நடிகை "அதிதிபாலன்" கவர்ச்சி புகைப்படம்!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Tue Dec 24 , 2019
அருவி படத்தில் அறிமுகமான நடிகை அதிதி பாலன் அந்த படத்தில் மிக சூப்பராக நடித்து வந்ததால் அவருக்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. எந்தவித கவர்ச்சியும் இன்றி என் நடிப்புத் திறமையை வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே ஏற்கவிருப்பதாக் அவர் கூறியிருந்ததால் அருவி திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்களாகியும் வேறு தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. கடந்த மாதம் தான் அவர் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பது […]

Actress HD Images

%d bloggers like this: